பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தின் மார்க்கமாகிய இயற்கையோடு இயைந்து வாழ வேண்டுவது மக்கள் கடமை. உலகிலுள்ள சமயங்கள் யாவுஞ் சன்மார்க்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. இந்த சன்மார்க்கம் பிற உயிர்களையும் தன்னுயிர் போல் ஒம்பச் செய்யும். பிற உயிர்கட்குத் தீங்கு செய்தல் தம்முயிர்க்குத் தீங்கு செய்தலாக முடிவது அவர்க்கு நன்கு தெரியும். இப்பெரு நிலையே சன்மார்க்கம். இதன் அஸ்திவாரம் - அருளறம்: சுவர்கள் - அன்பு, பண்பு சம நோக்கு, கூரை-அறிவு-அதாவது மெய்யறிவு.*

கடவுளிடத்து நிலையான உறுதியிருந்தால் இவை கிட்டும்.

இயற்கையோடியைந்த வாழ்வில் மனிதன் முழுமை பெறுகிறான். இயற்கையோடியைந்த வாழ்வு யாது?

பொருந்திய உணவு - அதாவது கொழுப்புச் சத்து அதிகமில்லாத பொருத்தமான, உணவு: சூட்சும அறிவை மயக்கமான நிலையில் தள்ளாத எளிய உணவு, பிற உயிர்களைத் தன் உணவுக்கென கொல்லாத, அன்பு கொண்டு பிற உயிர்களையும் வாழவைக்கும் எளிய சுத்தமான உணவு. அதே போல் மற்ற துறைகளும்.

சன்மார்க்க சமரசம் பின்பற்ற காட்டிற்கு ஒட வேண்டியதில்லை, துறவறம் மேற்கொள்ள வேண்டிய தில்லை. பொருந்திய ஒருத்தியும், ஒருவனும் இல்லறம் மேற் கொண்டு, அன்பால் கட்டுண்டு, அன்பின் வழியே நடாத்தும் வாழ்க்கையே இயற்கையோடியைந்த வாழ்க்கை. பெண் னினத்தை வெறுக்காது சன்மார்க்கம்.

ஏன்? இராமலிங்க அடிகளாரே இல்லறம் வெறுத்தவ ரல்லவே! இறையைக் காணாமற் தோல்வி கண்டாரா? இல்லையே!

  • மேலும் விவரங்களறிய ‘மனித வாழ்க்கையும் காந்தி

அடிகளும் சமய வாழ்வு-பகுதியைப் படிக்கவும்.

84