பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

110

காணப்பெற்றால் கேசவப்பிள்ளையே த8லமை ஏற்க வேண்டுமென்று கூறினர்.

கான் வெளியூரில் இருப்பவன். அடிக்கடி சென்னைக்கு வருவேன்; போவேன். சென்னையிலே வசிக்கும் ஒருவரையே தலைவராகக் கொள்ளல் கன்று. அத்தகையவர் வாடியா. அவரையே தலைவராகக் கொள் ளுங்கள்’ என்றார் கேசவப்பிள்ளை. -

அவ்வாறே வாடியாவைக் கண்டு பேசினர். வாடியாவும் கேசவப்பிள்ளையின் கருத்துக்கு இணங் கினர். வாடியா தியாசோபிகல் சங்கத்தைச் சேர்ந்தவர். அன்னிபெசன்ட் அம்மையாரின் வலக்கை என விளங்கியவர்.

1918ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27க் தேதி சனிக் கிழமை சென்னைத்தொழிலாளர் சங்கம் காணப்பட்டது. வாடியா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படடார். திவான் பகதூர் கேசவப் பிள்ளையும் திரு.வி.க.வும் உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அன்று முதல் தொழிலாளர் உள்ள பகுதிகள் தோறும் சென்று சென்று தொழிலாளர் இயக்கம் பற்றிப் பேசிப் பேசி ஆங்காங்கே தொழிலாளர் சங்கங்கள் அமைப்பதை ஒரு விரதமாகக் கொண்டார் திரு.வி.க.

திரு. வி. க. அவர்களின் சொன்மாரி கேட்ட தொழி லாளர் உலகம் உணர்ச்சி பெற்றது; விழித்து எழுந்தது. -

விழிப்பும் உணர்ச்சியும் எதில் கொண்டு விட்டன: தொழிலாளர் சங்கம் காண்பதில் கொண்டு விட்டன.