பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

15. சைவமும் திரு.வி.க.வும்

6 பிறந்தவர் திரு.வி.க. அவரது தந்தையார் சைவர்; அவர் திருநீறணிந்தார்; கோயி லுக்குப் போனர். திரு.வி.க.வும் திருநீறணிக்தார்; கோயிலுக்குப் போர்ை. திரு. வி. க. வின் தந்தையார் சைவப் பாடல்கள் பல பாடுவார். திரு. வி. க. அவற்றைக் கேட்டார்.

இராயப்பேட்டை சுந்தரேசுவரர் கோவிலில் ஒருவர் சைவப் பிரசங்கம் செய்தார். சித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர காயகர் என்பது அவர்தம் பெயர். இளம் திரு.வி.க.வும் அவரது கண்பர்களும் கோயிலின் உள்ளே செல்வர்; பிரசங்கம் கேட்பர். பிரசங்கத்தின் பொருள் அவர்களுக்குத் தெரியுமோ? தெரியாது.

1901ம் ஆண்டு டிசம்பர் மாத விடுமுறை. அப் போது யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை புரசைவாக் கத்திலே புராணப் பிரசங்கம் செய்தார்.

அவர்தம் பிரசங்கம் கேட்பதற்கென்று இராயப் பேட்டையிலே ஒரு கூட்டம் திரண்டது. அக்கூட் டத்தில் இளம் திரு.வி.க.வும் கலந்தார். அக்கூட்டம் புரசை நோக்கியது.