பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

6. மணவழகனரும் மணவாழ்வும்

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி திரு. வி. கலியான சுந்தரர்ைக்குத் திருமணம் நடைபெற்றது.

மணமகள் பெயர் கமலாம்பிகை. இவர் திருச்சி கிருஷ்ணசாமி முதலியாரின் புதல்வி, கிருஷ்ணசாமி முதலியார், கார்டன் உட்ராப் கம்பெனியில் தலைமைக் கணிதராயிருந்தவர். இவர்க்குப் பிறந்த மக்கள் மூவர். மூவருள் இருவர் ஆண். ஒருவர் பெண். அப்பெண்ணே கமலாம்பிகை.

கமலாம்பிகை, தம் குழந்தைப் பருவத்திலேயே தாய் தந்தையரை இழந்தார்; பெரிய தந்தையார் வளர்ப்பில் வளர்ந்தார்.

திருமணம் இருளப்பன் தெருவிலே மணமகள் இல்லத்திலே கடந்தது. அப்போது, அங்கே பல திறப் பட்டவரும் கூடியிருந்தனர். தேவாரம் முழங்கியது. கிறிஸ்தவ ஜெபமும் நிகழ்ந்தது. பலர் பரிசுகள் வழங்கினர். அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியாரும் வாழ்த்துரை வழங்கினர். ஆயிரம்