பக்கம்:திரு. வி. க.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ஆ அச. ஞானசம்பந்தன்

நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்-நிறைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் கோயில் என்று இளங்குழந்தை - ஞானமூர்த்தி - அருளிய மொழியை உன்னுங்கள்; எங்குஞ் சிவம் கோயில் கொண்டிருத்தலைத் தெளியுங்கள்; எங்கு முள்ள சிவத்துடன் சம்பந்தம் பெறுவதன்றோ சைவம்: அச்சிவ சம்பந்தம் இப்பொழுது எந்நிலையிலிருக்கிறது: சாதி சம்பந்தமன்றோ இப்பொழுது உலவுகிறது: சைவம் எங்கே? அனலிடை நின்ற சைவம்-புனலிடை நின்ற சைவம்-எங்கே: நீற்றறையில் நின்ற சைவம்கடலில் நின்ற சைவம்-எங்கே? அச் சுத்த சைவம் எங்கே? எங்கே? சாதிச் சைவமன்றோ இப்பொழுது நெளிந்து கொண்டிருக்கிறது? நினைக்க நினைக்க உள்ளம் உருகுகிறது; ஊன் குழைகிறது; கண்ணிர் பெருகுகிறது. சாதி மதம் மொழி நாடு முதலிய அஞ்ஞானப் புற்றுகள் சைவத்தின் மீது-அன்பின் மீது -எழும்பிப் படர்ந்துவிட்டன. அவற்றைத் தகர்க்க எழுங்கள்: சைவம் சமரசமுடையது; அஃது எவர்க்கும் உரியது; அன்பே சிவம் என்னும் உண்மையைப் பறைசாற்ற எழுங்கள்; ஞான சம்பந்தர் மறைக் காட்டினின்றும் வீறுகொண்டு மதுரைக்கு எழுந்ததை நினையுங்கள்; மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை எதிர் நோக்கிய வேட்கையை எண்ணுங்கள்; குலச்சிறை யார் விரதத்தையும் வீரத்தையும் கருதுங்கள்; உங்கட்கு எழுச்சி தானே பிறக்கும். முதலாவது திருக்கோயிலில் சாதிப்பேயை ஒட்ட உறுதி கொள்ளுங்கள்; பிற இடங் களிலுள்ள மற்றப் பேய்கள் தாமே ஒடும். என்றும் தாம் யாவர்க்கும் இடைவோமல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிராவார் யாருமில்லை என்று அஞ்சா நெஞ்சங்கொண்டு எழுங்கள்; அப்பா நான் வேண்டு தல் கேட்டருள் புரிதல் வேண்டும்; ஆருயிர்கட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/100&oldid=695385" இலிருந்து மீள்விக்கப்பட்டது