பக்கம்:திரு. வி. க.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ன் அச. ஞானசம்பந்தன்

என்ற அப்பர் பெருமானின் அருள் வாக்கையும்,

ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்ப ராகில்

அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவு ளாரே’

என்ற அவருடைய அரிய பாடலையும் படித்து அன்றாடம் பாராயணம் செய்கின்றவர்களும் மற்றொரு சைவருடன் உடன் இருந்து உண்ணக்கூட ஒருப்படுவ தில்லை.

சைவர்கள் மட்டும் இக்குற்றம் செய்கிறார்கள் என்று கூறுவதற்கில்லை. ‘குலந்தாங்கு சாதிகள் நாவினும் கீழ் இழிந்து எத்தனை நலந்தான் இலாத சண்டாள, சண்டாளர்கள் ஆகிலும் வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு

ஆள் என்று உள

கலந்தார், அடியார்தம் அடியார்எம் அடிகளே:

என்ற ஆழ்வாரின் அருள்வாக்கைப் பாராயணம் செய்கின்றவர்களும் இக் குற்றத்தினின்று தவிர்ந்தார் களில்லை. இராமாநுஜர் போன்ற ஒரு மாபெரும் சீர்திருத்தவாதியைத் தம்முடைய குருவென்று கொண்டாடி. ‘உடையவர் என்று பட்டம் சூட்டி மகிழும் மக்களும் சாதிப் பேய் பிடித்து அலைகின்றனரென்றால் இக்கொடுமையை யாரிடம் முறையிடுவது? திரு.வி.க. கற்ற பாடம்

இப்பெரியார்களின் வரலாறுகளையும் அவர்களுடைய அருட்பாடல்களையும் கற்ற திரு.வி.க. முன்னர்க் கூறப் பெற்றவர்கள் கனவிலும் கருதாத சமரச ஞானத்தைப் பெற்றார். திருஞான சம்பந்தராகிய அந்தணர் பெரு நட்புக்

  • நாலாயிரம், 2971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/104&oldid=695389" இலிருந்து மீள்விக்கப்பட்டது