பக்கம்:திரு. வி. க.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 95

கொண்டு தம்முடனேயே இருக்குமாறு செய்த பெரியவர் மற்றோர் அந்தணரல்லர் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்ற அரிஜனாவார். ஏனைய ஆழ்வார்கள் அனைவரும் அங்க மென்றும் நம்மாழ்வாரே அங்கி என்றும் போற்றப்பெறும் சடகோபர் வேளாளராவார்.

இப்பெருமக்கள் சாதி எனும் கட்டில் ஒருநாளும் அகப் பட்டதில்லை. உலக மக்கள் அறியாமையால் செய்த இக் கட்டை நீக்க முடியாதவர்கள் பிறவிக் கட்டாகிய அஞ்ஞானத்தை எவ்வாறு களைதல் கூடும்?

திரு.வி.க. அவர்கள் இப்பெரியார்களின் வாழ்விலும் பாடலிலும் சமரசங் கண்டார். சமரசத்தைப்பற்றி அவருடைய நூல்கள் அனைத்திலும் பேசியுள்ளார். சமயத் தொடர்பான நூல்களில் மட்டுமல்லாமல் அரசியல், சமுதாயம் பற்றிய நூல்கள் ஆகிய அனைத்திலும் பேசியுள் ளார். இத்துணை நீண்ட சொற்பொழிவும் சமயத்தைப் பற்றித் திரு.வி.க. கொண்டிருந்த கருத்து யாது என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.

அவர் கண்ட சமரசம்

சமயத்தைப்பற்றியும், இயற்கை பற்றியும், கடவுள் பற்றியும், வழிபாடு பற்றியும் சுருங்கிய முறையில் அவருடைய கருத்து யாது என்பதை ஒருவாறு கூறி வந்தேன். இனி இவை அனைத்துக்கும் மணிமகுடமாய் இலங்குவது அவரது சமரச சன்மார்க்கம். 1927இல் இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்’ என்ற நூலில் சமரச சன்மார்க்கம் பற்றிப் பேசிய திரு.வி.க. அவர்கள் 1953இல் இவ்வுலக வாழ்வை நீப்பதற்குச் சிலநாள் முன்னர்க் கண்பார்வை முற்றும் இழந்த நிலையில் பிறரிடம் சொல்லி எழுதச் செய்த வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல்’ என்ற நூல்வரை அனைத்திலும் சமரச சன்மார்க்கத்தையே போதித்தார். இராமலிங்க சுவாமிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/105&oldid=695390" இலிருந்து மீள்விக்கப்பட்டது