பக்கம்:திரு. வி. க.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 97

வரே! தேவரீர் திருவருட்பெருங் கருணைக்கு

வந்தனம்! வந்தனம்!” திரு.வி.க. கருத்துப்படி அப்பகை யாவை?

இதனை எடுத்துக்கூறிய திரு.வி.க. அவர்கள் உலகிடைச் சமரசம் ஏன் பரவவில்லை என்பதற்குரிய காரணங்களைத் தம் கூர்த்த மதிகொண்டு ஆராய்கின்றார். நாடு, மொழி, சமய வெறி, சாதிவெறி முதலியனவே அவை என்று கூறுகிறார்கள்:

“இத்துணை நாள் உலகிடைச் சமரசம் பரவா திருந்ததற்குக் காரணம் யாது? காரணம் பலபடக் கூற லாம். மனிதன் பாலுள்ள அழுக்காறு அவா வெகுளி முதலியன அவனைச் சமரச ஞானியாக்குவதில்லை என்று சுருங்கச் சொல்லலாம். மனிதன் அழுக்காறு முதலிய பேய்களான் தொடக்குண்டு இடர்ப்படும் வரை அவன் சமரச ஞானியாதல் அரிது; அரிது.

சமரசத்தைப்பற்றிப் பேசுதல் எளிது; எழுதுதல் எளிது. அதை நடையில் கொணர்வதோ அரிது. மனிதன் சமரசத்தைப்பற்றிப் பேசுவதினும், எழுது வதினும் அதை நடையில் கொணர முயல்வதே அறிவுடைமை. அதற்கு மனிதன் என் செய்தல் வேண்டும்?

மனிதன், அழுக்காறு முதலியவற்றைப் போக்க வல்ல வாழ்வில் தலைப்படல் வேண்டும். அவ்வாழ் விற்கு இடையூறாக உள்ள கொடுமைகளைக் களைய முயலல் வேண்டும். அக்கொடுமைகள் யாவை? அவை பலப்பல. ஈண்டுப் புற உலகியல்வழி நின்று சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். இச் சிலவற்றைக் களையும் ஆண்மையை மனிதன் பெறுவனாயின், அவன் அழுக்காறு முதலியவற்றைப் படிப்படியாக

இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், பக்கம் 37.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/107&oldid=695392" இலிருந்து மீள்விக்கப்பட்டது