பக்கம்:திரு. வி. க.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அச. ஞானசம்பந்தன்

நாளடைவில் களையும் ஆற்றலுடையவனாவன். அச் சில யாவை? நாடு, மொழி, சமயவெறி, சாதி முதலியன.”*

நாட்டுப் பற்றும் சமயப் பற்றும் மனிதனை நல்வாழ் வுக்கு உய்க்கும் என்று பிறர் எல்லாம் பேசத் திரு.வி.க. அவர்கள், தேசத் தொண்டில் வாணாள் முழுதையும் கழித்த திரு.வி.க. அவர்கள், மனிதன் களையவேண்டியவை சில என்று கூறி அவற்றுள் ஒன்றாக நாட்டுப்பற்றையும் சமயப் பற்றையுங் கூறுகிறாரே இது வியப்புக்குரியதன்றோ என்று சிலர் ஐயுறலாம். அவருடைய நூல்கள் முழுவதையும் கற்றவர்கட்கு இவ்வையம் தோன்றாது. ஒரு நேரத்தில் தேவைப்படும் ஒரு பழக்கம் அது இருக்க வேண்டிய காலம் கடந்த பிறகும் நிற்குமாயின் தீமையே விளைக்கும். இளமையில் குழந்தை அழாமல் இருக்க விரல் சூப்பும் பழக்கத்தை மேற்கொள்ளுகிறது. ஆனால், வயது வந்த பிறகும் அப்பழக்கம் இருக்குமாயின் அது வெறுக்கத்தக்கதேயாகும். சமரசவாதிக்கு இப்பற்றுகள் வேண்டா

நாட்டுப்பற்று என்பது தன்னுடைய தாய்நாட்டின் மேல் பற்றுக் கொள்வதாகும். ஆனால், அப்பற்று வெறியாக மாறிப் பிற நாடுகட்கு ஊறுவிளைக்கும் நிலையை அடைந்தால் அது களையப்பட வேண்டிய ஒன்றேயாகும். சமயப் பற்றும் அது போன்றதேயாகும். அன்றியும், சமரச சன்மார்க்கம் என்பது இவற்றையெல்லாங் கடந்த ஒன்று. ‘யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற நிலையில் சமரசத்தில் ஊறி நிற்கும் ஒருவனுக்குத் தன்னுடைய நாடு, சமயம் என்று பிரித்து அறிய ஒன்றுமில்லை. எல்லா நாட்டையும் தம் நாடுபோல் நேசிக்கும் ஒருவனுக்கு நாட்டுப்பற்று ஒரளவு இருக்கலாம். ஆனால், வெறியாக அது முகிழ்த்தற்கு வழியே

  • ‘இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், பக்கம் 29,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/108&oldid=695393" இலிருந்து மீள்விக்கப்பட்டது