பக்கம்:திரு. வி. க.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 99

இல்லை. முழுமுதற் பொருளின் அகண்டாகாரமான நிலையை அறிந்து கொண்டு அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதை நம்பும் சமரசவாதி, தன் சமயம் மட்டுமே உண்மை கூறுகிறது. பிற சமயங்கள் பொய் கூறுகின்றன என்று கூற எவ்வாறு அவனுடைய நா எழும்? பெரியார் ஒருவரால் ஒரு காலத்தில் தோற்றுவிக்கப் பெற்ற ஒரு சமயம் அகண்டாகாரமான இறைவனுடைய ஆணை யின்றி எவ்வாறு நிறுவப்பெற முடியும்? அவ்வாறு ஒரு சமயம் நிறுவப் பெற்று, நிலைத்தும் நிற்கின்றது எனின் அது இறைவன் திருவருள் வலுவால்தானே இருத்தல் கூடும். அவ்வாறு இருக்க, அச் சமயம் தவறானது, தாழ்ந்தது, இருக்கத் தகுதியற்றது என்று கூறச் சிற்றறிவுடைய இம் மனிதனுக்கு என்ன உரிமை இருக்கிறது? பழித்துரைப்பது சமயிகளையே

அவ்வாறானால் ஆழ்வார்களும் நாயன்மார்களும் கூட ஓரோ வழி பிற சமயங்களை இழித்து பாடியதன் காரண மென்ன என்ற வினா எழலாம். அவர்கள், இழித்தும் பழித்தும் பாடியது பிற சமயங்களையோ அவற்றின் கொள்கை களையோ அன்று. அத்தகைய சமயங்களை மேற்கொள் வதாகக் கூறிக்கொண்டு அச் சமயங்கட்கு மாறான செயல்களைச் செய்த சமயிகளையே பழித்துப் பேசினர் நாயன்மார்கள். அதேபோன்று. இந் நாயன்மார்கள் தங்களுடைய சமயிகளையும் தவறிழைக்கும் பொழுது இடித்துக் கூறத் தயங்கவே இல்லை. சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் என்றும் அறிவிலீர்! என் சொல்? என்றும் சைவ சமயிகளையே இடித்துரைத்திருக்கின்றனர். மக்கள் தொண்டு புரிந்தனர்

சமரச நோக்குடையார் எல்லர் உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமையுடையவராய் வாழ்வராகலின், இறைவனுக்குத் தொண்டு செய்வதைவிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/109&oldid=695394" இலிருந்து மீள்விக்கப்பட்டது