பக்கம்:திரு. வி. க.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஆழ் அச. ஞானசம்பந்தன்

கோயில் கட்டடத்துக்கும், வாகனத்துக்கும், தேருக்கும், மடமைக்கும், வக்கீலுக்கும், தாசிக்ககும், பொன்னுக் கும், பிணத்துக்கும், வேறு பல களியாடல்களுக்கும் சொரிவது அன்பர் செயலாகாது. இத்தகைய மூடச் செயல்கள் நமது நாட்டை விடுத்து அறவே அகலல் வேண்டும். நான் இவ்வாறு கூறுவது சிலருடைய மனத்தைப் புண் படுத்தலாம். இக்கால அறத்தை வலியுறுத்த வேண்டுமென்று என்னுள்ளத்துள்ள தெய்வ ஆணை (மனச்சான்று) என்னைப் பிடர் பிடித்து உந்துகிறது. அது வழியே யான் நடக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அத் தெய்வ ஆணைக்கு மாறுபட்டு நடப்பேனாயின், யான் மனிதப்பிறவி எடுத்தவனாகேன். எனது கடமையை யான் செய்வேன். எவர் என்ன கூறினும், என்ன நினைப்பினும் என்ன செய்யினும், எனது மனச்சான்று வழியே யான் எழுதுவேன்; பேசுவேன்; நடப்பேன். என் உரைகளால் சிலர் உள்ளம் புண்படுமாயின், அதனால் விளையும் பாவத்தை என்னுள்ளத்திலுள்ள தெய்வம் தாங்கிக் கொள்ளும் என்னும் உறுதி எனக்குண்டு”.*

- சமரச சன்மார்க்கத்தில் ஈடுபட்டவர்கள் மக்கட் பணியையே இறைவன் பணியாகக் கருதுவார்கள். மனிதர்கள் செய்ய வேண்டிய பணிகுறித்துப் பெரியார் கீழ்வருமாறு எழுதுகிறார்:

“மனிதர்பால் அருமையாக அரும்பியுள்ள பகுத்தறிவினின்றும் முகிழ்க்கும் பணி பலதிறப்பட்டு நிற்கிறது. சிலர் துறவொழுக்கம் பூண்டு தமக்கேற்ற பணியை ஆற்றுகின்றனர்; சிலர் ஆட்சி புரிகின்றனர்; சிலர் உழுது பயிரிடல் முதலிய தொழில்களை

- என் கடன் பணிசெய்து கிடப்பதே, பக்கம் 56-58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/112&oldid=695398" இலிருந்து மீள்விக்கப்பட்டது