பக்கம்:திரு. வி. க.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இ அச. ஞானசம்பந்தன்

எத்துணைச் சிறப்பற்றதாயினும், அதுபற்றிக் கவலைப் படாமல் இது நடைபெறுவதற்குப் பெருமகிழ்ச்சி அடைபவர் கல்கியே ஆவர். திரு. வி.க.வைப் பற்றிக் கல்கி எழுதியதை ஈண்டு நினைவுகூர்தல் பொருத்தமே.

“தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர் குலத்துக்கும் தந்தையாக இருந்தார்; தொழிலாளர் குலத்துக்குத் தாயாகி விளங்கினார்; எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகிய திறத்தினால் அந்தணர் திலகமாகத் திகழ்ந்தார்; என் கடன் பணி செய்து கிடப்பதே: என்ற திருவாக்கை வாழ்க்கையில் கடைப்பிடித்து நடந்தார்; தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்ந்தார்; அன்பே சிவம் என்ற உண்மையில் வாழ்க்கை எல்லாம் திளைத்திருந்தார். இன்று அன்பிலும் சிவத்திலும் இரண்டறக் கலந்துவிட்டார் திரு. வி. கலியாணசுந்தர முனிவர்.

கவிதை மூலமாகப் பாரதியார் தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் செய்த அரும்பணியைத் திரு. வி.க. தமிழ் வசன நடைமுலமாகச் செய்தார்; எழுத்தினாலும் பேச்சினாலும் அத் திருப்பணியை அவர் ஆற்றினார். இனிய எளிய செந்தமிழ்ச் சொற்களைக் கொண்டும் அதிக நீளமில்லாத சிறிய வாக்கியங்களை அமைத்தும் திரு. வி.க. நிகழ்த்திய சொற்பொழிவுகள், மெத்தப் படித்த அறிவாளிகளையும் ஏட்டுக் கல்வியே பயிலாத தொழிலாளிகளையும் ஒரே சமயத்தில் கவர்ந்து மெய்ம் மறந்து கேட்டுக் கொண்டிருக்கும்படிச் செய்தன.” கல்கியின் உரைநடை

புதினம், சிறுகதை, கட்டுரை முதலிய எல்லாத் துறை களிலும் கல்கி சிறந்த முறையில் எழுதினார். அவர் கால எழுத்தாளர்களுள் அவர் ஈடும் எடுப்பும் அற்று விளங்கினார். ஆனால், இப் பல்வேறு துறைகளிலும் பொதுத் தன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/12&oldid=695406" இலிருந்து மீள்விக்கப்பட்டது