பக்கம்:திரு. வி. க.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அச. ஞானசம்பந்தன்

கொண்டு என்ன ஊகிக்கலாம்? ஆரிய மக்கள் இந்தியாவிற் புகப்புக-இந்தியாவின் இயற்கை நலத்தை நுகர நுகர-அவர்கள் அஹிம்ஸா மூர்த்திகளானார்கள் என்று ஊகிக்கலாம்.

இந்திய ஆரிய மக்களும், மற்ற நாட்டு ஆரிய மக்களும் பல வழியிலும் மாறுதலடைந்துவிட்டார்கள். இருவரும் ஓரினத்தவர் என்று நம்புவதற்கும் இடமில்லாமற் போயிற்று. இந்திய ஆரியர் பலர் அறவோராய்செந்தண்மையினராய் மாறினர். மற்ற நாட்டாரியர் மிலேச்சராய்ப் பிறரை வதைப்பவராயினர். இந்திய ஆரிய மக்கள் எழுதியுள்ள நூல்களை யும், மற்றவர் எழுதியுள்ள நூல்களையும் ஆராய்ந்தால் உண்மை விளங்கும். முன்னவை ஆத்ம சக்தியை வளர்ப்பனவாக வும், பின்னவை தேக சக்தியை வளர்ப்பனவாகவு மிருத்தல் வெள்ளிடை மலை.

உலகம் ஹிம்ஸைக்கு இரையாகிவரும் இந் நாளிலும்-சேர்க்கை காரணமாக இந்தியா தனது அறநெறியினின்றும் வழுக்கி வீழ்ந்துள்ள இவ் வேளையிலும்-அஹிம்ஸையை அறிவுறுத்தும் பெரியோர் யாண்டுள்ளனர்? இந்தியாவிலன்றோ? இந்தியாவை, எத்தகை இருள் சூழிலும் அதன் நெஞ்சில் எம் மூலையிலாதல் அஹிம்ஸா தர்ம தெய்வம் உறங்கியேனும் கிடக்கும். அஹிம்ஸை, இந்தியாவின் உயிர்-உயிர் நாடி”

மார்க்கிஸம் -

இவற்றையடுத்து மார்க்ஸியம்பற்றிப் பேசுகிறார் பெரியார். இந் நூல் எழுதிய காலத்தில் மார்க்ஸியம் புதுமையாய் யாண்டும் பேசப்பெற்ற காலம். திரு.வி.க. அவர்கள் மார்க்ஸ்த்தில் பெரும் பற்றுடையவர் என்று

‘இந்தியாவும் விடுதலையும் பக்கம் 1-13.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/124&oldid=695411" இலிருந்து மீள்விக்கப்பட்டது