பக்கம்:திரு. வி. க.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fi இ. அச. ஞானசம்பந்தன்

செய்யப்படுகிறது. எனவே, இதுதான் மார்க்கிலம் என்ற முடிந்த முடிவாக இதுவரை யாருங் கூறுவாரிலர்.

நலத்தை ஏற்கலாம் -

எனவே, மார்க்கிஸத்திலுள்ள நல்ல கருத்துக்களை இந்தியா ஏற்றுக் கொள்ளலாம் என்பதே பெரியாரின் கருத்தாகும். எந்தெந்த நாட்டில் மார்க்கிலம் பரவுகிறதோ அந்தந்த நாட்டின் சூழ்நிலைக்கேற்ப அது மாறுதலடைந்து வளரும் என்பதே பெரியார் கொள்கை. அதுபற்றி அவருடைய கருத்தை இதோ காணலாம்:

“மார்க்கிலம் ஒருவிதத் தத்துவம். அது நடைமுறையில் அதன் தத்துவப்படியே வளராது; நாடுகளின் இயற்கை நோக்குக்கும் போக்குக்கும் ஏற்ற முறையிலேயே வளர்வ தாகும். நமது இந்தியா-பழமையில் பேர்பெற்ற இந்தியா - மார்க்கிலத்தை அப்படியே ஏற்று தடத்தல் அரிது. எத்துணையோ தத்துவ இயல்களை உண்டு, ஜீரணிஞ் செய்து, சத்தை ஏற்று, அசத்தைத் தள்ளிய இந்தியா-மார்க்கிலத்தை மட்டும் உள்ளவாறு ஏற்குமா? அதை உள்ளவாறே ஏற்க இந்தியாவின் இயற்கை இடந்தாராது. ஆதலின், மார்க்கிலம் என்றதும், அந்தோ! சார்வாகம்-உலகாயதம்-நாஸ்திகம் என்று மருட்சியடைந்து, அதைத் தீண்டலுமாகாது என்று பிடிவாதஞ் செய்வது அறிவுக்கழகன்று. தார்க்கீகத்தையும் மீமாஞ்சகத்தையும் ஈன்ற இந்தியா-வியாச சூத்திரத்தை ஈன்ற இந்தியா-திருவள்ளுவரையும் இளங்கோவையும் ஈன்ற இந்தியா-மார்க்கிஸத்தை ஏற்க அஞ்சுமோ? அதை ஆராய்ந்து உண்மை காணப் பின்னிடுமோ? ஒருபோதும் அஞ்சாது; பின்னிடாது. எதையும் ஆராய்ந்து பார்க்கும் உரிமை மனபதைக்கிருத்தல் வேண்டும். அவ்வுரிமையற்ற இடம் நாகரிகம் செறிந்ததாகாது.

மார்க்கிஸம் ஹிம்சையைப் போதிப்பதென்று சில இடங்களில் கருதப்படுகிறது. இஃது உலகை ஹிம்ஸிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/126&oldid=695413" இலிருந்து மீள்விக்கப்பட்டது