பக்கம்:திரு. வி. க.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 19

இழந்துவிட வேண்டும் என்ற கருத்தில் யாரும் கூறவில்லை. தமிழர் என்ற தனித்தன்மையையும் பண்பாட்டையும் விடாமல் போற்றுவதில் தவறில்லை. ஆனால், வாழும் நாட்டைத் தாய்நாடாகக் கருதவேண்டும். அவர்கள் பழக்க வழக்கங்களை ஏற்றுக்கொண்டால் ஒழிய ஒட்டி உறவாடும் இயல்பு படியாது. அந்த இயல்பு ஏற்படாமையின் அந்த நாட்டார் இவர்களை வேற்றவர்களாகவே கருதி வெறுப்புப் பாராட்டுகின்றனர். பர்மாவிலும், மலாய்நாடு, இலங்கை முதலிய இடங்களிலும் நிகழ்வது இதுதான். ஆனால், பிஜித் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இடங்கட்குச் சென்றவர்கள் அடிக்கடி தாய்நாடு நோக்க முடியாமையின் அந்த அந்த நாடுகளையே தம் தாய்நாடாக ஏற்றுக் கொண்டனர். இதுபற்றிப் பல்லாண்டுகளின் முன்பே திரு.வி.க. அவர்கள் கீழ்வருமாறு எழுதுகிறார்கள்:

“2.L860 Jlifulb (Foreign Matter) 56055/16i) அது பிணிபட்டு நோய்வாய்ப்படுகிறது. நாட்டிலும் அந்நியம் நுழைந்தால் அது பிணிபட்டு நோய்வாய்ப் படுவதாகும்.

ஒரு நாட்டில் அயலவர் புகாமலிருத்தல் இயலுமோ? இயலாது. ஒரு நாட்டில் அயலவர் புக நேர்ந்தால் அவர் தமது வழக்க ஒழுக்கங்களைக் கொணர்ந்து அந் நாட்டில் நுழைக்க முயலுதல் கூடாது. அயலவர் நாளடைவில் தாம் புகுந்த நாட்டைத் தாய்நாடாகக் கொண்டு, அதன் இயற்கை வழிவாழ்வு நடத்த உறுதி கொள்வது அறம். அதனால் நாட்டின் வாழ்க்கை, அரசு, கலை, பழக்க ஒழுக்கம் முதலியன கேடுறா. நாடு பிணியுடையதாகாது என்று சுருங்கச் சொல்லலாம்.

நாடு என்பது ஓர் எல்லைக்கு உட்பட்ட வெறும் நிலப்பரப்பு மட்டுமன்று. நிலத்தின் இயற்கைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/129&oldid=695416" இலிருந்து மீள்விக்கப்பட்டது