பக்கம்:திரு. வி. க.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 121

கிராமமும் வாழ்வும்

பழங்காலக் கிராம அமைப்பைப்பற்றி எழுதிச் செல்லும் பெரியாரவர்கள் ஒரு சிறந்த பகுதியை மறவாமல் எடுத்துக் கூறுகிறார்.

“அது கிராமம், கிராமத்தார் சொத்தாகவே பாவிக்கப்பட்டதென்பது. கிராமம் கிராமத்தாரின் பொதுவுடமையாயிருந்தது. அவ்வத் தொழிலாளர் தத்தம் தொழிலைக் குறைவறச் செய்து கிராமத்தை நன்முறையில் ஒம்புவர்.

பொது வேலைகட்கென்று கூலியாள் அமைக்கும் முறையே அந்நாளில் கிடையாது. பொது வேலைகளை எவ்வித ஊதியமுமின்றிக் கிராமத்தாரே செய்வர். காடளிக்கும் பொருளெல்லாம் பொதுமையி லேயே பயன்பட்டு வந்தன. கால்நடைகள் காடுகளில் மேய்ந்து வரும். எவ்விதக் கட்டுப்பாடுங் கிடையாது. கூடிவாழும் அறமே கிராமமாகக் காட்சியளித்தது.” பழங்காலத் தமிழகத்தில் இத்தகைய கிராம வாழ்க்கை இருந்ததை அறிந்த அறிஞர் அவர்கள் தனி உடைமையை உதறித்தள்ளி உடைமைகளனைத்தையும் சமுதாயப் பொதுவாக்கும் மார்க்கிலத்தையும் விரும்பி ஏற்றுக் கொண்டதில் தவறில்லை. அன்றியும் மார்க்கிலத்திலுள்ள குறைபாட்டை நீக்கிவிட்டால் அது இந்திய நாட்டிற்கு ஏற்றதாகும் என்றே கருதினார் பெரியார். அவர் கண்ட பொதுவுடமை

ஆனால், மார்க்கிஸத்தின் ஆணிவேராக அமைந்தி ருப்பவை நிரீஸ்வர வாதமும் வன்முறை ஆதரிப்புமாகும். அவை இரண்டையும் நீக்கிவிட்டால் அது கிறிஸ்தவ சோஷலிஸம் என்று பிற்காலத்தார் அழைத்த ஒரு

- இந்தியாவும் விடுதலையும், பக்கம் 41.

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/131&oldid=695419" இலிருந்து மீள்விக்கப்பட்டது