பக்கம்:திரு. வி. க.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 அச. ஞானசம்பந்தன்

கொள்ளாமல் வாழ்ந்தனர். அழுக்காறு, அவா என்ற இரண்டு குறைவாக உள்ள இடத்தில் தனி உடைமை அத்துணை விரும்பப்படுவதில்லை. இதுவே பண்டைய கிராமங்களின் நிலை. வரலாற்றைப் படிப்பவர் பலராயினும் திருவிக வைப்போல் வரலாற்றிலிருந்து உயிரான பகுதியைத் தேடி எடுத்துத் தருபவர்கள் மிகமிகக் குறைவே.

இந்தியா ஒரு நாடா?

இதனையடுத்து அந்நாளில் பெரு வழக்காயிருந்த ஒரு பிரச்சினையில் பெரியாரின் ஆராய்ச்சி சென்றது. அந்நாளில் மட்டுமல்லாமல் இன்றுங்கூடச் சில இடங்களில் இது ஒரு பிரச்சினையாகவேதான் இருந்து வருகிறது. இந்தியா என்றாவது ஒரு நாடாக இருந்ததுண்டா? இன்றேல் சிறுசிறு நாடுகளின் தொகுப்பாக இருந்து வந்ததா? என்பதே அப்பிரச்சினை. இதுபற்றி அறிஞர் கூற்றை அப்படியே இங்குத் தர விரும்புகிறேன். .* -

“இமயம் முதல் கன்னிவரை நீண்டிருப்பது பரதம். இமசேது பரியந்தம் என்னும் வழக்கையும் நோக்குக. இமயவாடையும் பொதிகைத் தென்றலும் பரதத்தில் மண்டி இயற்கை ஒருமைப்பாட்டை வளர்த்து வருகின்றன.

‘பரதகண்டம் ஒரு பெரிய நாடாயின் நாட்டுக் குரிய இயல்புகள் பல அதன்கண் இருத்தல் வேண்டு மன்றோ? எப்பொழுதேனும் பரதம் ஒருமைப் பாடுடையதாயிருந்ததா? என்று சிலர் வினவ முற்படலாம். முற்காலப் பரதம் ஒருமைப்பாடுடையதா

யிருந்தது என்பதற்குச் சான்றுகளிருக்கின்றன. முதலாவது-பரதகண்டம் என்ற பெயரை உன்னுக. பரதன் என்னும் ஒருவனால் கண்டம் முழுவதும் ஆளப்பெற்றமை விளங்குதல் காண்க. வேறு சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/134&oldid=695422" இலிருந்து மீள்விக்கப்பட்டது