பக்கம்:திரு. வி. க.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 127

அவ்வாட்சி நுழைந்தது. திராவிடப் பெயர் வடமொழி நூல்களிற் காணப்படுகிறது. தமிழ் ஒரு தனிமொழி. தமிழ், தமிழம், தமிளம், திரமிளம், திரவிடம், திரவினியம், துரனியம் எனப் பலவாறு மருவலாயிற்று. விரிவு ஈண்டைக்கு வேண்டுவதில்லை.

‘சம்ஸ்கிருதம் என்பது, செம்மையாக-நன்றாகச் செய்யப்பட்டது என்னும் பொருளையுடையது. அஃது எதனின்றும் செம்மை செய்யப்பட்டது? அது பிராகிருதத்தினின்றும் செம்மை செய்யப்பட்ட தென்பது பல அறிஞர் ஒப்பமுடிந்த உண்மை.”

எது ஒரே நாடு?

இடையீடில்லாத நிலமாக இருப்பதனால் மட்டும் ஒன்றை ஒரே நாடு என்று கூறிவிட முடியாது. இன்றுள்ள ஆஃப்ரிக்காவை எடுத்துக்கொள்வோம். எகிப்தியர், காங்கோ பிரதேசத்தில் உள்ளவர், தென்னாஃப்ரிக்காவில் உள்ளவர் அனைவரும் இடையீடுபடாத ஒரு நிலப்பரப்பில் வாழ்ந்தாலும், இவர்களை ஒர் இனத்தவர் என்றோ ஒரு நாட்டார் என்றோ கூறல் இயலாது. இவர்களை ஒர் இனத்தார் என்று எக் காலத்திலும் யாரும் கருதியதுமில்லை. ஆனால், இந்தியாவைப் பொறுத்தமட்டில் நிலைமை இதற்கு நேர்மாறானதாகவே இருந்துவந்தது. பழைய புறநானூற் றுள்ளும் ஆகப் பழைய பாடல் என்று கருதப்பெறும் இரண்டாம் புறப்பாடல் கீழ்வருமாறு பேசுகிறது!

“அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தி விளக்கில் துஞ்சும் பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே”

1. இந்தியாவும் விடுதலையும், பக்கம் 45-47. 2. புறம், 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/137&oldid=695425" இலிருந்து மீள்விக்கப்பட்டது