பக்கம்:திரு. வி. க.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 129

ஆனால், அதே அசோகருடைய வரலாறு திரு.வி.க. அவர்கட்கு எத்தகைய நினைவை உண்டாக்கியிருக்கின்றது என்பது அறியப்பட வேண்டிய ஒன்று. இந்த நாட்டில் தோன்றிய மாபெரும் புரட்சி ஒன்றின் மணிமகுடமாக விளங்குகிறார் அசோகர். புத்தபிரான் தோன்றுவதற்கு முன்னர் இந் நாட்டில் வைதீக சமயம்தான் பரவியிருந்த தென்றும், கொலை, வேள்வி முதலியவற்றை ஆதரிக்கும் அந்தச் சமயத்தின் எதிரான வேதங்களை ஏற்காத புத்த சமயம் தோன்றிற்று என்றும் இதுவரை படித்துள்ளோம். வைதீகச் சமயத்தின் எதிராகத் தோன்றிய பெளத்த சமயத்தை அசோகர் ஆதரித்துப் பரப்பினார் என்றும் வரலாற்றில் படித்துள்ளோம். அவர் கண்ட அசோகன்

இந்தக் கருத்தின் எதிரே அசோகனுடைய வாழ்க்கை, திரு.வி.க.விற்கு எத்தகைய காட்சி நல்கிற்று என்பதை அவருடைய மொழிகளிலேயே காணலாம்:

“அசோக சக்கரவர்த்தி நாற்பதாண்டு ஆட்சி புரிந்தவர். அவர் சந்திரகுப்தர் பேரர். அவர் காலத்தி லேயே பரம்பரை தர்மம், பெளத்தப் போர்வையில் முழு உருக்கொண்டு, முற்கால இந்தியாவிலும் வேறிடங்களிலும் தாண்டவம் புரிந்தது.

அசோகர் நினைவெழும்போதே வேறிரண்டு வடிவம் உள்ளத்தில் உடன் தோன்றுகின்றன. ஒன்று ஆதி மதுவின் வடிவம்; மற்றொன்று புத்தரது வடிவம். இரண்டுக்கும் இடையில் சிங்க நோக்காக நிற்பது அசோகர் வடிவம். இம் மூன்றுஞ் சேர்ந்த ஒன்று பழங்காலப் பாரத தர்ம ஆட்சிக்கு ஒர் அறிகுறியாய் இலங்கியதென்க.

இக்கருத்தை இக் காலச் சரித்திர உலகம் ஏற்குமோ? ஏலாது. பின்னே வரப்போகுஞ் சரித்திர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/139&oldid=695427" இலிருந்து மீள்விக்கப்பட்டது