பக்கம்:திரு. வி. க.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ஐ அச ஞானசம்பந்தன்

என்பது அவர்தங் கொள்கை. அவர்தங் கருத்துத் தனியே வீட்டின்மீது சென்றதில்லை; அறவொழுக்கத் தின்மீதே சென்றது. பெண் ஆணை வெறுத்தும், ஆண் பெண்ணை வெறுத்தும் தனித்து வாழ்வது இயற்கைக்கு மாறுபட்டு நடப்பது என்னும் உண்மை பழைய மக்களுக்கு நன்கு விளங்கியிருந்தது. அந்நாளில் முனிவரும், மனைவி மக்களை நீத்தோடுவது துறவு என்று கருதினாளில்லை; மனமாசென்னும் தன்ன லத்தை நீப்பதே துறவு என்று அவர் கருதினர். பண்டை முனிவரர் பலரும் மனமாசென்னும் தன்னலத்தை அகற்ற மனைவிமக்களுடன் வாழ்ந்தே உயிர்கட்குச் சேவை செய்தமை உலகறிந்ததொன்று.

அக்கால இந்தியர், இயற்கை வாயிலாகவே இறையுண்மையை உணர முயன்றவர்; அவர் தனித்த வாழ்விற் புகாது, பெண் ஆண் சேர்க்கையென்னும் இயற்கை வாழ்வில் ஈடுபட்டவர்; இயற்கையின்பம் நுகர்ந்தவர்; அவர் இயற்கையை வழிபட்டவர் என்று சுருங்கச் சொல்லலாம்.

இயற்கை வழிபாடென்பது இயற்கையைக் கைகூப்பித் தொழுது வாளா கிடப்பதன்று. பின்னை என்னை? இயற்கை இறை வடிவம் என்று, அதைச் சிந்தித்தல், கற்றல், கேட்டல், தொழில் செய்தல், தனித்து வாழாது இல்வாழ்க்கையில் நின்றொழுகல், மக்களை ஈன்று உலக வளர்ச்சிக்குத் துணைபுரிதல், விருந்தோம்பி அன்பையும் தியாகத்தையும் பெருக்கல், அன்பாலும் தியாகத்தாலும் மனமாசென்னும் தன்ன லத்தை அகற்றல், எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகல் முதலியன இயற்கை வழிபாட்டின் பாற்பட்டன.

முற்கால இந்தியாவில் உருவ - வழிபாடு இருந்ததா இல்லையா என்பது உன்னற்பாலது. உருவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/144&oldid=695433" இலிருந்து மீள்விக்கப்பட்டது