பக்கம்:திரு. வி. க.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 135

வழி பாட்டைப் பற்றி பலதிறக் கருத்துக்கள் தோன்றி யுள்ளன. உருவ வழிபாடு புராண காலத்தில் ஏற்பட்டதென்று ஒரு சாரார் சொல்லுப. புராணத்தில் உருவ வழிபாடிருத்தல் வெள்ளிடை மலை. இதி காசத்தில் உருவ வழிபாடு சொல்லப்படாமலா இருக்கிறது? இதிகாசத்திலும் உருவ வழிபாடு சொல்லப்பட்டே இருக்கிறது. வேதத்தில் லிங்கம்’ பேசப்படுகிறது. அதனால் வேத காலத்திலும் உருவ வழிபாடிருந்த தென்றே கொள்ளுதல் வேண்டும். காலத்தால் இவை யெல்லாவற்றிற்கும் முற்பட்ட மொஹேஞ்சோதாரோ ஹரப்பா ஆராய்ச்சியால் உருவ வழிபாடு இருந்ததென்றே தெரிகிறது. அப்பழம் பதிகளின் நாகரிகத்தை உணர்த்தும் வடிவங்களும் பொருள்களும் சில கிடைத்துள்ளன. அவற்றுள் ஒன்று மோனமூர்த்தி வடிவம். அஃது அந்நாளில் உருவ வழி பாடிருந்தமையை வலியுறுத்துவதாகும். மொஹெஞ் சோதாரோ-ஹரப்பா நாகரிகம் பண்பட்டது. அந் நாகரிகத்தில் உருவ வழிபாடு நிகழ்ச்சியிலிருந்ததெனில், அதற்கு முன்னரும் அவ்வழிபாடு நிகழ்ச்சியிலிருந்து வளர்ந்திருத்தல் வேண்டுமென்பதற்கு விளக்கந் தேவை இல்லை. உருவ வழிபாடு எக்காலத்தில் தோன்றிற்றோ தெரியவில்லை. அக்காலத்தை அறுதியிட்டுக் கூறுதல் இயலாது. முற்கால இந்தியாவில் உருவ வழிபாடு இருந்தது உண்மை. அதை மறுப்போர் சரித்திர உலகில் வாழாதவராவர். .

முதலில் உருவ வழிபாடு மரத்தடியிலே தோன்றி யிருத்தல் வேண்டும். இதற்குத் தல விருட்சங்களின் சான்றே சாலும். பின்னே ஒவியத் துறை வளரவளரத் திருமாளிகைகள் கட்டப்பட்டன. அந்நாள் தொட்டு உருவ வழிபாடு, திருக்கோயில் வழிபாடு என்ற பெயர் பெற்றது. திருக்கோயில் பழைய இந்தியரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/145&oldid=695434" இலிருந்து மீள்விக்கப்பட்டது