பக்கம்:திரு. வி. க.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அச. ஞானசம்பந்தன்

அருமையினும் அருமை என்று சொல்லப்படுவது வழக்கம். அருமையினும் அருமையை அக்பர் எளிமை பினும் எளிமையாக்கினர். அரசர் மனம் ஒரு பக்கம் சாராது நேரிய நடுமையில் நின்றால் அருமைகளெல் லாம் எளியனவாகும். வேற்றுமை ஒற்றுமை என்பன மனத்திலிருப்பன. மனத்தில் வேற்றுமை விளைந்தால் உலகிலும் வேற்றுமை விளையும் அதில் ஒற்றுமை நிலவினால் உலகிலும் ஒற்றுமை நிலவும்.

அக்பர் முஸ்லிம் வயிற்றில் பிறக்க நேர்ந்தமை பால், அவர் ஹிந்துக்களை அடக்கவோ தம் கொள்கை யில் ஈர்க்கவோ முயன்றிருத்தல் வேண்டுமோ? அது மூர்க்கர் செயலாகும். அக்பர் அறிஞர்; அன்பர்; பரந்த நோக்குடையவர். அவருக்கு ஹிந்துக்களும் நாட்டவ ராகவே காணப்பட்டனர்; முஸ்லிம்களும் நாட்ட வராகவே காணப்பட்டன. இருவரிடத்திலும் அவருக்கு வேற்றுமை தோன்றவில்லை.

அக்பர் அரசாங்கத்திலும் சேனையிலும் பிற வற்றிலும் ஹிந்துக்களையும் அமர்த்தினர்; முஸ்லிம் களையும் அமர்த்தினர். அவர் ஹிந்து என்றோ முஸ்லிம் என்றோ கருதி எவரையும் வேலையில் அமர்த்துவதில்லை. அவர் தம் மனம் எல்லாரையும் மனிதரென்றே கருதிற்று. அக்பர் மனம் வேற்றுமையில் நிற்கவில்லை. ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை அக்பர் ஆட்சியில் உரம் பெற்றே நின்றது.

ஆட்சிக்குத் துரண் போன்றவர் அமைச்சரும் படைத்தலைவருமாவர். அக்பர் ஆட்சித் தூண்கள் ஹிந்து-முஸ்லிம் கலப்புற்றனவாகவே இருந்தன. அக்பரின் அமைச்சர் ராஜாதோடர்மாலும் அபுல்பாஜி லும்; படைத்தலைவர் ராஜாமான்சிங்கும் ராஜாபீர் பாலும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/148&oldid=695437" இலிருந்து மீள்விக்கப்பட்டது