பக்கம்:திரு. வி. க.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 139

அக்பர், முஸ்லிம் பெண்ணையும் மணஞ் செய்தனர்; ஹிந்து ராஜபுத்திரப் பெண்ணையும் மணஞ் செய்தனர்; ஒரு கிறிஸ்துவப் பெண்ணையும் மணஞ் செய்தனரென்று சில சரித்திராசிரியர் சொல்லு கின்றனர்.

ஒற்றுமைக்குரிய கலப்பு மணத்தை அக்பர் தாமே செய்துகாட்டினர். கலப்பு மணம் அந்நாளில் காட்டுத்தீப்போல் நாட்டிடைப் பரவியிருந்தால் இந்தியா அடிமை நாடாகியிராது. ஹிந்துக்களின் சாதிக்கட்டும், சம்பிரதாயக் கட்டும், பிற கட்டுக்களும் கலப்பு மணத்தைப் பெருக விடவில்லை. ஒற்றுமைக் குரிய நல்ல நல்ல வாய்ப்புகளை யெல்லாம் இந்தியா நெகிழவிட்டது.

முஸ்லிம் அல்லாதார்க்கென்று பிறப்பிக்கப் பெற்ற சட்டங்களெல்லாம் அக்பரால் ஒழிக்கப் பட்டன. அவரால் குழந்தை மணம் விலக்கப்பட்டது; கைம்மையவர் கொடுமை ஒருவாறு அகற்றப்பட்டது; கட்டாய உடன்கட்டை யேறுதல் நிறுத்தப்பட்டது: அடிமைமுறை அழிக்கப்பட்டது.

அக்பர் மாட்டிறைச்சி தின்பதை விடுத்ததும், பசுக்கொலையையும் பலியையும் நிறுத்த முயன்றதும் குறிக்கத்தக்கன.

அக்பர் ஆட்சியில் நிலவரி தவிர மற்றெல்லா வரிகளும் தொலைக்கப்பட்டன; வேறு LJHU) சீர்திருத்தங்களும் செய்யப்பட்டன.

அக்பர் இஸ்லாமானவர்; வேறு பல சமயங்களை யும் ஆராய்ச்சி செய்தவர்; எல்லாச் சமயங்களிலும் உண்மையிருத்தல் விளங்கப்பெற்றவர். அவரைச் சமரச சன்மார்க்கர் என்றே கூறுதல் வேண்டும். அவர் கிறிஸ்துவப் பாதிரிமாரை அன்புடன் வரவேற்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/149&oldid=695438" இலிருந்து மீள்விக்கப்பட்டது