பக்கம்:திரு. வி. க.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$40 அ.ச. ஞானசம்பந்தன்

கருதற்பாலது. அக்பர் காலத்திலேயே இங்கிலீஷ் கிழக்கிந்திய வாணிபக் கூட்டமும், டச்சுக் கிழக்கிந்திய வாணிபக் குழுவும் தன்தன் அரசர் கட்டளை பெற்று இந்தியா போந்தன. அக் குழுவினர் உரிமையுடன் வாணிபஞ் செய்ய அக்பர் கருணை ஆட்சி இடந் தந்தது.

அக்பர் ஆட்சியில் தமிழ்நாடு கலவாமலே இருந்ததென்று சரித்திரங் கூறுகிறது. ஆனால், தமிழ்த் தென்றல் அவர் ஆட்சியில் வீசாமலில்லை. குமர குருபரர் என்ற தமிழர் அக்பர் காலத்திலேயே காசியம் பதி சேர்ந்து தமிழ் மடமொன்று அமைத்துத் தமிழ் வளர்த்தது தமிழ் மக்களுக்குத் தெரிந்ததொன்று. குமரகுருபரர் அக்பரை நேரிற் கண்டு பேசினர் என்றுஞ் சொல்லப்படுகிறது. குமரர், காசியில் கம்ப இராமாயணத்தை ஹிந்தியில் பிரசங்கஞ் செய்தனராம். அப்பிரசங்கத்தைக் கேட்டுக் கேட்டுத் துளளிதாஸ் ஹிந்தி இராமாயணம் எழுதினரென்று டாக்டர் சாமிநாத ஐயர் கூறுகிறார். அக்பர் ஆட்சியில் தமிழ்க் கம்பர் கருத்துக்கள் ஹிந்தியில் அமரவும் நேர்ந்தது போற்றுந் தகையதே’

அசோகர், அக்பர், ஒளரங்கசீப்

இந்திய ஒருமைப்பாட்டிற்கு அசோகர் f L# கோலினார். அக்பர் மாபெருங் கட்டம் சமைத்தார். ஆனால், ஒளரங்கசீப் அக் கட்டடத்தை இடித்துத் தரைமட்டமாக் கினார் என்பதுதான் திரு.வி.க.வின் வரலாற்று முடிபு.

“அதிகாரஞ் சிறந்ததன்று சேனா பலமும் சிறந்ததன்று குடிமக்களின் மகிழ்ச்சியே சிறந்தது. அதிகாரமும், சேனாபலமும் எற்றுக்கு? குடிமக்களின்

- இந்தியாவும் விடுதலையும், பக்கம் 104, 107.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/150&oldid=695440" இலிருந்து மீள்விக்கப்பட்டது