பக்கம்:திரு. வி. க.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 அ.ச. ஞானசம்பந்தன்

சிதைவுகளாகிய கற்குவியல்களில் நிழலில் நின்று காலங் கழித்தவர். ஆகவே, அவரைக் கணக்கில் சேர்க்க வேண்டுவதில்லை. ஒளரங்கசீப்புடன் முஸ்லிம் ராஜ்ய ஆக்கமே முடிந்தது என்று கொள்க.

ஒளரங்கசீப் ஆட்சியில் கருக்கொண்ட உள் நாட்டுக் குழப்பங்கள் பலதிற உருவந் தாங்கித் தாங்கிப் பெருகின. அவை மத்திய அரசாங்கத்தின் கால்களை முரித்தன; அதனை இயங்க ஒட்டாமல் செய்தன. குழப்பங்களின் இடையிடையே மஹாராஷ்டிரம், இராஜபுதனம் முதலியன எழுந்தும் விழுந்தும் மறைந்தன. ஓர் இந்தியா, ஹிந்து இந்தியா-முஸ்லிம் இந்தியா-போர்ச்சுகீசிய இந்தியா-பிரெஞ்ச் இந்தியாஇங்கிலீஷ் இந்தியா என்று பலவகையாகப் பிரியத் தொடங்கிற்று. இப் பிரிவுகளால் நேர்ந்த பிணக்குகளும் போர்களும் பலப்பல. அவற்றை ஈண்டு விரித்துக் கூறவேண்டுவதில்லை.”*

இந்திய வரலாற்றின் சாரமாக உள்ள இதனை அழகுற. எடுத்துக்கூறிய ஆசிரியர். இடைக்கால இந்தியாவின் தோற்றுவாய் நன்றாயிருந்தது; இறுவாய் இரங்கத்தக்கதாயிற்று இடைக்கால இந்தியாவின் முற்பகுதியின் இறுதி, இந்து ராஜ்யத்துக்கு முடிவுதேடிற்று. அதனால் சாதிப் பாகுபாடுகளும், சம்பிர தாயக் கட்டுகளும், பிறவும் அயலவரைக் கூறி அழைப்பன வாயின. அவ்விந்தியா முஸ்லிம் ராஜ்ய எழுச்சிக்கு நல்வரவு கூறிற்று என்று பொதுப்படக் கூறலாம் (பக்கம் 15) என்று கூறுகிறார்.

ஒப்பு நோக்கம்

முஸ்லிம் ஆட்சி அந்நியர் ஆட்சிதான் என்றாலும் தைமூர் போன்ற சில கயவர்களை நீக்கிப் பார்த்தால்.

. இந்தியாவும் விடுதலையும் பக்கம் 111, 115.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/152&oldid=695442" இலிருந்து மீள்விக்கப்பட்டது