பக்கம்:திரு. வி. க.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$44 அ.ச. ஞானசம்பந்தன்

தெய்வக் கழகம் குலைந்துபோயிற்று கிளைகளும் முரிந்தன. உமை ஓடிய இடந் தெரியவில்லை. திரு. வாமி, காளி முதலியோர் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் முதலிய இடங்களுக்குச் சென்று விட்டனர். பாரதத்தில் அவர்தம் உருவங்கள் மட்டும் படமாய்-கல்லாய் செம்பாய்ப் போயின. அவற்றுக்கு வந்தனை வழிபாடுகள் செய்யப்படுகின்றன. வெறும் வந்தனை வழிபாடுகளால் ஞானம், செல்வம், கல்வி, தொழில், வீரம், அறப்போர் முதலியன ஓங்கி வளருமோ? அவை மீண்டும் பழையபடி ஓங்கி வளரல் வேண்டும். இதற்கு நாடு இப்பொழுது அடைந்துள்ள விடுதலை போதாது; முழு விடுதலை அடைதல் வேண்டும். பலதிற இடுக்கண்கள் நானாபக்கமுஞ் சூழ்ந்துள்ள இவ் வேளையில் நாடு எப்படி முழு விடுதலை அடையும்?”

நம்மிடமுள்ள குறை

காந்தியடிகளின் தத்துவங்களில் ஊறியிருந்த திரு.வி.க. அவர்கள் நாட்டுக்கு விடுதலை அளிக்க வேண்டியவர்கள் பொறுப்பை நன்கு அறிந்திருந்தார். பிரிட்டிஷார் செய்ய வேண்டிய கடமை ஒன்றே ஒன்றுதான். அதுதான் மூட்டை முடிச்சுகளுடன் கப்பல் ஏறவேண்டிய கடமை. ஆனால், அவர்களை அவ்வாறு போகாமல் தடுக்கும் சக்திகள் நம்மிடந்தான் உள்ளன என்பதே அவருடைய அரசியல் வாதம். நம்மிடையே உள்ள ஒற்றுமையின்மை, சாதி வெறி முதலியனவே வெள்ளையரை இங்கே பிடித்திழுத்து வைத்திருக்கும் சக்தி என்று இந்தியாவின் தலையெழுத்து’ என்ற கட்டுரையில் கூறுகிறார்.

. இந்தியாவும் விடுதலையும், பக்கம் 202. t தமிழ்ச் சோலை-1, பக்கம் 108.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/154&oldid=695444" இலிருந்து மீள்விக்கப்பட்டது