பக்கம்:திரு. வி. க.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$45 அச. ஞானசம்பந்தன்

அறிதல் வேண்டும். பொது வேலைநிறுத்தம் நடைபெறும் பொழுது இரண்டொரு கருங்காலிகளால், முதலாளிகளால் விலைக்கு வாங்கப்பெற்ற கூலிப் பட்டாளங்கள் வேலை நிறுத்தத்தை ஒழிக்க முயல்வர். இதனால் மனக் கொதிப்படைந்த தொழிலாளரிற் சிலர் வன்முறையைக் கையாள்வதும் உண்டு. முதலாளிமார்களும் தொழிலாளரிற் சிலரேனும் இத்தகைய வன்முறையில் இறங்கவேண்டும் என்பதையே விரும்புகின்றனர். ஏனெனில், ஆள்வோரின் படைபலம் அவர்களிடந்தான் உள்ளது. தொழிலாளர் வன்முறையில் இறங்கினால்தான் படை பலத்தைப் பயன் படுத்த முடியும். எனவே, துப்பாக்கிச் சூடு முதலியவை நிகழத் தொழிலாளர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ காரணர் அல்லர். அவர்களையும் மீறி அநியாய வழியில் நடைபெறும் துப்பாக்கிச் சூட்டிற்கோ, நாடுகடத்தல் போன்றவற்றிற்கோ திரு.வி.க. அஞ்சவே இல்லை. மாபெரும் வீரராய் முன்னின்று இவ்வேலை நிறுத்தங்களை நடத்தினார். - -

நமது குறைகள்

ஆனால், பிரிட்டிஷாரை ஓட்ட எங்கோ ஒன்றிரண்டு வெள்ளையரைச் சுடுவதை அவர் விரும்பவில்லை. காரணம் இரண்டு வகைப்படும். தனி மனிதரைச் சுடுவதால் அதிகார வர்க்கத்தை ஒன்றுஞ் செய்துவிட முடியாது. இது வரலாறு கண்ட உண்மை. இரண்டாவது, நம்மிடம் குற்றங்களை வைத்துக்கொண்டு, வெள்ளையனே வெளியேறு என்று கூப்பாடு போடுவதால் பயனில்லை. இந்த இரண்டும் திரு.வி.க.வின் ஆழ்ந்த முடிவுகள். அவருடைய அரசியல் ஞானமும் கூர்த்த மதியும் இவற்றை நன்கு அறிந்து கொண்டன. நம்மிடம் சாதி வேறுபாடு, அந்நிய நாகரிக மோகம் முதலிய குற்றங்கள் இருக்கும்வரை அந்நியன் வெளியேறவும் மாட்டான்; வெளியேறினாலும் அதனால் ஒன்றும் பயன் விளையப் போவதில்லை. இந் நிலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/156&oldid=695446" இலிருந்து மீள்விக்கப்பட்டது