பக்கம்:திரு. வி. க.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 இ. அச. ஞானசம்பந்தன்

பேசியதும், உள்ள சட்டங்களுக் கிணங்கித் தம்மைக் குற்றவாளியென்று சொல்லிக் கொள்வதும், இன்னோ ரன்ன பிறவும் என்ன காட்டுகின்றன?

சத்தியாக்கிரகப் போர் முதலியன, உலகச் செயற்கைக் கொடுஞ் சட்டங்கட்கு முரணாகத் தோன்றினும், அவை இயற்கை அறச் சட்டங்களை அரண்செய்யும் நியாய வரம்புடையனவேயாகும். காந்தியடிகளின் வாழ்வே நியாய வரம்புவழி நின்று இயங்குவதென்பது, அவரது வாழ்வின் நுட்பம் உணர் வோர்க்குப் புலப்படாமற் போகாது.

சத்தியாக்கிரக வக்கீல்களைப் பற்றிப் பிறந்த ஆமதாபாத் ஜில்லா நீதிபதியின் கடிதத்தை யங் இந்தியாவில் அடிகள் வெளியிட்டதும், அதைப்பற்றி அவர் எழுதியதும் நியாயமன்று; அவமதிப்பாகும் என்ற குற்றம் அவர்மீது சாட்டப்பட்டபோது, பம்பாய் நீதி மன்றத்தில் மன்னிப்புக் கேட்குமாறு நண்பர் பலர் அவரை வேண்டினர். அவ்வேண்டுதலுக்கு மகாத்மா இணங்கினாரில்லை. அதைப்பற்றி மகாத்மா, “மன்னிப்புக் கேட்டல் கூடாது என்னும் பிடிவாதம் எனக்கில்லை; மூலத்தில் ஒரு தர்மமிருக்கிறது என்று கூறிப் பத்திராசிரியர் உரிமைக்கும் சட்டத்துக்கும் ஊறு நிகழாமுறையில் நடந்துகொள்ளல் வேண்டுமென்னுங் குறிப்போடு ஒர் அறிக்கை செலுத்தியதும் ஈண்டுக் கருதத்தக்கது.”* -

“ஒத்துழையாமை கோடல் மக்கள் தீதன்று; முறை மீதேயாகும். கவர்னர்கள் மீது அது செலுத்தப்படுவதன்று; ஆனால், அவர்கள் வயமுள்ள ஆட்சிமுறை மீதே அது செலுத்தப்படுகிறது.”

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பக்கம் 445-447.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/160&oldid=695451" இலிருந்து மீள்விக்கப்பட்டது