பக்கம்:திரு. வி. க.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152. அ.ச. ஞானசம்பந்தன்

முக்கியமானது. தவறான வழிகளை மேற்கொண்டு பெருநன் மையைப் பலருக்கும் செய்வதைக் காட்டிலும் அவ் வழியை மேற்கொள்ளாமல் இருப்பது சிறந்தது. இவ்வாறு அடிகள் கூறக் காரணம் நன்மை, தீமை என்று கூறப்பெறுபவை இரண்டும் ஒப்பு நோக்குச் சொற்கள். நன்மை என்பதையும் தீமை என்பதையும் முடிபு செய்வதற்கு நாம் யார்? எனவே, மேற்கொள்ளும் வழி தூய்மையானதாக இருத்தல் வேண்டும் என்றார் அடிகள். இவ் வாதம் சமயத்தின் அடிப்படையில் பிறந்தது. அவர் வேண்டும் அரசியல்

திருவிகவோ எனில் இவை இரண்டையும் கலந்தார். மார்க்கிஸம் கால் பங்கும், மகாத்மாவின் அரசியல் முக்காற் பங்குமாகக் கலந்ததே திரு.வி.க.வின் அரசியலாகும். அந்த இருபெரு மக்களும் காணாத ஒர் அரசியலை, அதாவது, சமரச சன்மார்க்க சமயத்துடன் கூடிய பொதுவுடைமை என்பதே பெரியார் கண்ட அரசியலாகும்.

இறைவழி நில்லாத அரசைத் திரு.வி.க. ஒப்ப மறுத்துவிடுகிறார். அத்தகைய அரசியல் எத்துணைச் சிறந்தது என்று கூறப்பெறினும், அவ் வரசியலில் வாழ்வோர் தேனும் பாலும் உண்டு தேக்கெறிகின்றனர் என்று கூறினாலும் தமிழ்ப் பெரியார் நம்ப மறுக்கின்றார். இவ்வாறு அரசை அமைப்ப வர்கள் தாம் புத்துலகம் காணப் போவதாகவும், பழைய உலகிடைக் காணப்பெறும் கொடுமைகள், துயரங்கள், தீமைகள் ஆகியவை அப் புத்துலகில் இரா என்றும் கூறுகின்றனர். இவ்வாறு கூறுவோர் தாம் எல்லாம் அறிந்ததாக நினைத்துக்கொள்ளும் நினைவிலிருந்துதானே இக்கூற்றுப் பிறக்கின்றது? உண்மைச் சமய வாழ்க்கை இல்லாத மனிதன் வாழ்வு பூரணமாக மலராது என்று நம்பும் பெரியார் இக் கூற்றை எவ்வாறு ஏற்றுக்கொள்வார்? எனவே, இத்தகையவர்கள் அமைக்கும் அரசு இராவணன், கயிலாயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/162&oldid=695453" இலிருந்து மீள்விக்கப்பட்டது