பக்கம்:திரு. வி. க.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

தமிழறிஞர்

நடையில் மனிதன் வெளிப்பாடு

‘ஒரு மனிதனை அறியவேண்டுமாயின் அவன் எழுதும் நடையிலிருந்தே அறிந்துகொள்ள முடியும்’ என்பது மேனாட்டு முதுமொழிகளுள் ஒன்று. திரு.வி.க. அவர்களைப் பொறுத்தமட்டில் இம் முதுமொழி முற்றிலும் உண்மை யானதே. ஆனால், கல்வியறிவு பெறாதவர்களும் பேசுகிறார் களே. அந்தப் பேச்சு நடையிலிருந்தும் அவர்களுடைய பண்பாட்டை அறிதல் கூடுமோ என்ற ஐயம் எழலாம். ஓரளவுக்கு இதுவும் உண்மைதான். தாம் சொல்லவந்த கருத்து எத்துணை எளிமையுடையதாயினும் அதனைச் சொல்வதில் பல வகையுண்டு. ஒரு சிலர் எதிரே இருப்பவர்க்கு நன்கு புரியும் வண்ணம் எதனையும் எடுத்து விளக்கும் நடையில் பேசும் சிறப்பை அறிந்துள்ளோம். மற்றுஞ்சிலர் எத்துணைக் கற்றவர்களாயினும் தம் கருத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் ஆற்றல் இன்றி இருப்பதையுங் காண்கிறோம். எனவே, ஒருவனுடைய நடையிலிருந்து மனிதரை அறிந்து கொள்ள முடியும் என்பது பொருத்தமான முதுமொழிதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/166&oldid=695457" இலிருந்து மீள்விக்கப்பட்டது