பக்கம்:திரு. வி. க.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 161

அவரளவில் முற்றிலும் உண்மையானது. கதிரை வேலனாரிடம் தணிகைப் புராணமும், கந்தபுராணமும் தொடக்கத்தில் கேட்டதாக வாழ்க்கைக் குறிப்பில் (பக்கம் 96) குறிக்கிறார். இதனை ஏதோ புராணப் பிரசங்கம் என்று இக்காலத்தார் நினைப்பதுபோல் நினைத்துவிடக் கூடாதென்று கருதிய பெரியார் இரண்டும் வெறும் புராணப் பிரசங்க மேடைகளாயிரா. அவை கலைக் கழகங்களாகத் திகழும். கதிரைவேலரின் சொன்மாரி வெள்ளத்தில் இலக்கியம். இலக்கணம், தர்க்கம், சாத்திரம் முதலியன தேங்கும். அத் தேக்கம் மாணாக்கர்க்குக் கலை விருந்தாகும்’ (பக்கம் 96) என்று எழுதுகிறார்.

கல்வி போதனை இருவகை

பழங்காலத்தில் கல்வி இரு வகைகளில் போதிக்கப் பெற்றது. தொல்காப்பியத்தில் வல்லார் ஒருவர் இருப்பார். அவர் தம்மிடம் வரும் மாணாக்கர்க்கு அந்நூலை ஐயந்திரிபு அறக் கற்பிப்பார். ஆனால், இலக்கிய மணங்கமழாது அவருடைய போதனைகளில் உரையாசிரியர்கள் மேற்கோ ளாகக் காட்டியுள்ள பாடல்களை மட்டுமே அவ்வாசிரியர் கூறுவார். அதுவும் அங்குக் கூறப்பெற்ற இலக்கணத்திற்கு இந்த மேற்கோள் எம்முறையில் பொருந்துவதாகும் என்பதை மட்டும் அவர் குறித்துச் செல்வார். மற்றொரு வகைக் கல்வி கதிரைவேற்பிள்ளை போன்றவர்களிடம் சொற்பொழிவு கேட்பதாகும். இத்தகைய சொற்பொழிவுகளில் பெரியார வர்கள் கூறியபடி இலக்கணம், இலக்கியம், தருக்கம், சாத்திரம் ஆகியவை இடம் பெறும். ஆணவ மலத்தின் இலக்கணத்தை சிவஞானபோத சூத்திரங் கொண்டு மட்டும் விளக்கஞ் செய்யும்பொழுது அது சாத்திரப் பாடமாகிறது. ஆனால், அடியார்கள் வாழ்க்கையில் வைத்துப் பேசப்பெறும் பொழுது இரண்டையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/171&oldid=695463" இலிருந்து மீள்விக்கப்பட்டது