பக்கம்:திரு. வி. க.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 இ. அ.ச. ஞானசம்பந்தன்

முன்னர்க் கூறிய பெரியார்களிடம் திரு.வி.க. மட்டுமா கற்றார். இன்னும் பலரும் கற்றிருக்கலாமே அவர்கள் யார் என்று அறியக்கூட வாய்ப்பில்லாமல் அவர்கள் பெயர்கள் மறைந்துவிட்டன. திரு.வி.க. இல்லையேல் மயிலை மகாவித்து வான் பெயர்கூட இன்று நம்மால் அறியப் படாமற் போயிருக் கலாம். எனவே, பலரும் கற்ற ஓர் ஆசிரியரிடம் இவருங் கற்றார் என்றால் இவரிடம் இருந்த தனித்தன்மை யாது? அதுவே சிந்திக்கும் பழக்கம். - சிந்திக்கும் பழக்கம்

திரு.வி.க.வின் உடன் கற்ற பலருக்கும் இல்லாத ஒரு பழக்கம் இது. அவர்கள் கற்றார்கள். கிளிப் பிள்ளைகளைப் போல. பின்னர் தாம் கற்றதைப் பிறருக்கு அப்படியே ஒப்பித்தார்கள். இந்த முறையில்தான் நம் நாட்டில் இன்றுங் கல்வி போதிக்கப் பெற்று வருகிறது. சிந்திக்கும் பழக்கத்தை மாணாக்களிடம் தூண்டும் இயல்பு ஆசிரியர்களிடம் இல்லை; காரணம் அவர்கட்கும் அப் பழக்கம் இன்மையேயாகும். மயிலை மகாவித்துவானிடம் கற்ற திரு.வி.க.செவி வாயாக, நெஞ்சு களனாக, இருவென இருந்து, சொல் எனச் சொல்லித்தான் கற்றார். எனினும், அவரிடம் நேரே பயிலாத நேரத்தில் தாமே சிந்திக்கும் பழக்கத்தையும் ஆற்றலையும் பெற்றார். இதனால்தான் ஒரு தமிழறிஞர் நுழைய நினையாத துறைகளில் எல்லாம் அவர் நுழைந்தார். -

அகிலம் ஒரு கழகம்

பெரியாரவர்கள் நூல்களின் மூலம் கற்றவற்றைக் காட்டிலும் இயற்கையின் மூலம் தாம் அதிகம் கற்றதாக அவரே கூறுகிறார். இயற்கை, காவியம், ஒவியம், இசை என்பன அவரைப் பொறுத்தமட்டில் மகிழ்ச்சியை மட்டும் ஊட்டாமல் மனத்தை விரிவடையச் செய்தன. கல்வியின் பயன் மன விரிவேயாகும். ஆனால், பெரும்பான்மை யானவர்கள் பெறும் கல்வி மனத்தில் அனுபவ விரிவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/174&oldid=695466" இலிருந்து மீள்விக்கப்பட்டது