பக்கம்:திரு. வி. க.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க 169

மனத்தை ஈனும். குழந்தை மனத்தில் இயற்கையின் உள்ளுறை புலனாகும்.

இயற்கையின் உள்ளுறையை விளக்கவல்லது இயற்கைக் கல்வி என்பது அநுபவத்தில் உணரத்தக்கது. அதற்குச் சொற்பெருக்கு வேண்டுவதில்லை. இயற்கைக் கல்வி உலகெங்கும் பெருகுதல் வேண்டுமென்பது எனது வேட்கை ஏட்டுக் கல்வியை எத்துணை நாள் கட்டி அழுகுவது? ஏட்டுக் கல்வி என் செய்யும்? ஏட்டளவில் நின்றுகொண்டிருக்கும். ஏட்டுக் கல்வி இயற்கைக் கல்வியாதல் வேண்டும். இதற்குரிய எண்ணம் தேவை. எண்ணம் என்ன செய்யாது? எல்லாஞ் செய்யும். இயற்கைக் கல்வி எவ்வுயிரும் பொது, பொது என்னும் உணர்வைப் பிறப்பிக்கும்; உணர்வு செயலாகும்; செயல் தொண்டாகும்.

இயற்கைக் கல்வி என்னைத் தொண்டனாக் கியது; தமிழ்த் தொண்டனாக்கியது.”*

இயற்கைக் கல்யின் பயன்

இத்துணைச் சிறந்த முறையில் இயற்கை அன்னையின் அருளால் கல்வி பெற்றமையால்தான் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலின் பொருளை அவர் உணர முடிந்தது. உயர்நிலை வகுப்புப் படிக்கும் மாணாக்கன் கூட இந்த வரிக்குப் பொருள் கூறிவிடுவானே! அப்படி இருக்கத் திரு.வி.க. இத்துணைப் பாடுபட வேண்டுமா இதன் பொருள் உணர: என்று சிலர் நினையலாம். அந்த வரிகளின் பொருளை, அதாவது, சொற் பொருளை, அகராதிப் பொருளை, இலக்கணவழி அமைந்த சொற்பொருளை நாமும் அறிவோம். ஆனால், இந்த நான்கு சொற்களின் பொருளை, உட்கருத்தை, அவை காட்டும் அனுபவ உலகை அவை

  • வாழ்க்கைக் குறிப்புகள், ப. 123-126 வரை.

|2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/179&oldid=695471" இலிருந்து மீள்விக்கப்பட்டது