பக்கம்:திரு. வி. க.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 அ.ச. ஞானசம்பந்தன்

அறிவிக்கும் சகோதரத்துவப் பாடத்தை அறிந்தவர் சிலரே! உணர்ந்தவர் மிகச் சிலரே! வாழ்வை அது அமைந்த நிலையில் ஏற்றுக்கொண்டு மனித நிலையினின்றும் மீறித் தெய்வநிலைக்கு ஆளாயினார் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களேயாவர், ‘யாதும் ஊரே என்ற இவ்வரிகளைக் கற்கும் நாம் அவை ஒரு கவிதையின் ஒரடி என்றும், அக் கவிதை தமிழ் மொழியில் ஆயது என்றும், அத் தமிழ் வழங்கும் நாடு எது என்றும் அறிவோம். ஆனால், இயற்கைக் கல்வி பயின்ற திரு.வி.க. போன்றவர்கட்கு இவ்வடி தமிழ் எது? மொழியா? அன்று; நாடா? அன்று; பின்னை எது? வாழ்க்கை என்றும், திருவள்ளுவர், ஷெல்லி, தாகூர் முதலியோர் தமிழ் வாழ்க்கையினர் என்று கூறல் மிகையாகாது (பக்கம் 125) என்றும் பொருள் கூறுமாறு உணர்வை நல்கியது; அதாவது, பரந்து விரிந்துள்ள மனநிலையை நல்கியது.

இத்தகைய மனநிலையுடையார் காணுகின்ற காட்சியெல்லாம் வேறாகவே இருக்கும்; இவர்கள் பேசுகின்ற பேச்செல்லாம் வேறாகவே இருக்கும்.

மொழி சிறந்த கருவியா? உரைநடை

இனி இப் பெரியாரின் உரைநடைபற்றி முதலிற் காண்போம். திரு.வி.க.வின் உரைநடை தமிழ் இலக்கிய உலகில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கியதை யாரும் மறுத்தல் இயலாது. அவருக்கு முன்னர் இருந்த தமிழ் நடையுடன் அவருடைய நடையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுதுதான் எவ்வளவு பெரிய புரட்சியை அவர் செய்துள்ளார் என்பது விளங்கும். ஒருவருடைய கருத்தைத் தெரிவிப்பதற்குத்தான் மொழியைக் கையாள்கின்றோம். மனிதன் பேச்சை அறிவதற்கு முன்னர் சைகை, குறிப்பு என்பவற்றால்தான் தன் கருத்தை அடுத்தவருக்கு அறிவித்து வந்தான். மொழியை அறிந்த பிறகுதான் அவனுடைய அறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/180&oldid=695473" இலிருந்து மீள்விக்கப்பட்டது