பக்கம்:திரு. வி. க.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 171

பெருகத் தொடங்கிற்று. எவ்வளவு சிறப்புடையது என்று மொழியை வியந்து பாராட்டினாலும், சொல் என்பது கருத்தை வெளியிடுவதற்கு முற்றிலும் ஏற்ற கருவி என்று கூறிவிட முடியாது.

கவிதை இலக்கணம்

பல சமயங்களில் ஆராத் துயரத்தையும், எல்லையிலா மகிழ்ச்சியையும் வெளியிட முகக்குறிப்பு அல்லது பாவம்’ உதவுவதுபோல் நூறு சொற்களும் பயன்படுவதில்லை என்பது நாம் அறிந்த ஒன்றுதான். எத்துணை ஏற்பில்லாத கருவியாயினும் மனிதன் சொல்லைப் பயன்படுத்தித்தான் பிறருக்குத் தன் கருத்தை அறிவித்து வருகின்றான். சிறந்த கவிதையைப்பற்றிக் கூறவந்த மாத்யூ ஆர்னால்ட் என்ற திறனாய்வாளர், சிறந்த சொற்களைச் சிறந்த வரிசையில் பயன்படுத்துவதே சிறந்த கவிதையின் இலக்கணம் என்று கூறினார். இந்த இலக்கணம் கவிதைக்கு மட்டுமல்லாமல் உரைநடைக்கும் ஓரளவு பயன்படும் என்பதை மனத்துட் கொள்ள வேண்டும்.

தமிழ் உரைநடை வளர்ச்சி

இந்த அடிப்படையில் தமிழில் உரைநடை வளர்ந்த வரலாற்றைப் பார்த்தால் அது முற்றிலும் செம்மையடைந்து விட்டது என்று கூற முடியாத நிலைமையில் தான் உள்ளது. தமிழில் கவிதை சிறப்படைந்தது போல உரைநடை வளம் பெறவில்லை என்பது தெளிவு. காரணம், சென்ற இரு நூற்றாண்டுகளாகத்தான் உரைநடை எழுதும் பழக்கம் தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது. அதிலும் முற்பகுதியில் பாதிரிமார்கள் தம்முடைய சமயப் பிரசாரத்திற்கென்றே உரைநடையை வளர்க்கத் தொடங்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/181&oldid=695474" இலிருந்து மீள்விக்கப்பட்டது