பக்கம்:திரு. வி. க.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 இ. அ.ச. ஞானசம்பந்தன்

எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெரு வாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும் இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக் கறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி, வாழ்வித்தல் வேண்டும்”.

இதனையடுத்த வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்

அவர்கள் எழுதிய மதிவாணன் என்ற நூலிலிருந்து ஒரு பகுதியையும் காண்டல் வேண்டும்:

“உடனே கன்னி நாடனும் பொன்னி நாடனை நோக்கி மதிவாண ! முன்னரே நுந்தையார் தஞ்சை வாணரும் அமைச்சர் வாய்மையாளரும் நீ எம்மாலீண்டை வருமாறு அழைக்கப்பட்டதன் காரணம் இன்னதென்றுரைத்திருப்பர். அன்றியுமிப் போழ்தத்து ஈண்டன் நிகழ்வுறுமவற்றினும் அஃதின்ன தென்றுணர்ந்திருப்பையெனினும் அதனைக் குறித்து நேரே யாமும் சிறிது பேசுதல் கருதி நின்னை யழைத்தனம்.” திரு.வி.க. காலத்தே வாழ்ந்த மறைமலையடிகளாரின்

உரைநடையையும் ஒரு சிறிது காண்டல் வேண்டும்:

“இங்கனமாக நங் கட்புலனெதிரே இயங்கா நின்று மாப்பேருலகங்களும், இவை தமக்கு இடனாய் எல்லையின்றி எங்கும் விரிந்து இலங்கா நின்ற நுண்ணிய வான் வெளியும் எல்லாம், எங்கும் மங்கா இலகு பேரொளியுடன் சுடர் விரிந்து துலங்கக் காண்டலால் இவ்வொளியின் எல்லையற்ற பரப்பே எல்லையின்றி எங்கும் விரவி விளங்காநின்ற இறை வன்றன் றிருவுருவமாகப் பண்டைத் தமிழராற் கருதி வழுத்தப்படுவதாயிற்று."-தமிழர் மதம்.

  • ‘இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், பக்கம் 98.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/184&oldid=695477" இலிருந்து மீள்விக்கப்பட்டது