பக்கம்:திரு. வி. க.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 175

இதனையடுத்துத் தமிழ்க் கொலைக்கு ஓர் உதாரணம் தருகிறேன்.

1944ஆம் ஆண்டில் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் தம் பத்திரிகைக்குக் கட்டுரை எழுதி அனுப்புபவர்கட்கு எழுதியனுப்பிய குறிப்பாகும் இது என்று மு. அருணாசலம் அவர்கள் இன்றைய தமிழ் வசன நடை (பக்கம் 53) என்ற நூலில் தந்துள்ளதைக் கீழே தருகிறேன்:

“வ்யாஸம் எழுதுபவர்களுக்கு விஜ்ஞாபநம். அநேக வித்வான்கள் மகத்தான க்ருபையுடன் வயாலங்களை அனுப்பி அவைகளை உடனே பத்ரிகையில் ப்ரசுரம் செய்யவேண்டுமென்று நியமிக் கிறார்கள். பத்ரிகையில் இடம் ஸங்குசிதமாக இருக்கிற படியால் அவர்களுடைய நியமநத்தை அவர்கள் இஷ்டப் பிரகாரம் நிறைவேற்ற சாத்யப்படாமல் இருக் கிறது. அவசர ஸம்ப்ராப்தமாகும்பொழுது அவைகள் யதார்ஹம் ப்ரசுரம் செய்யப்படும். அப்படிச் செய்வதால் ஸ்ம்பவிக்கும் கால விளம்பத்தை அந்த வித்வான்கள் கடிமிக்க வேண்டுமென்று ப்ரார்த்திக் கிறோம்.-ஸ்ம்பாதகர்.”

இதை எடுத்துக்காட்டிய திரு அருணாசலம் அதே நடையில், “ஆம்! இதைப் படியாநிற்கும் மஹநீயர்கள் தம்மை கடிமிக்க வேண்டுமென்று நாமும் ப்ரார்த்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். தமிழ் மொழிக் கொலையில் கடைசியாகக் காட்டிய பகுதி ஒருவகை. இந்த வகையார் ஏன் இவ்வாறு எழுதுகிறார்கள் என்பதை அவர்களைப் படைத்த இறை வனே அறிவான். ஒருவேளை தமக்கு இரு மொழிகளிலும் தேர்ச்சியுண்டு என்பதை அறிவிக்கவே செய்கின்றனர் போலும். ஆனால், இரு மொழித் தேர்ச்சியுடையவர்கள் கூட இதனை ஏற்றுக்கொள்கிறார்களா என்பது ஐயத்திற்குரியதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/185&oldid=695478" இலிருந்து மீள்விக்கப்பட்டது