பக்கம்:திரு. வி. க.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 அச. ஞானசம்பந்தன்

தொடங்குகின்றனர். பிற மாவட்டங்களில் உள்ளவர்கள் இதனைப் படிக்கையில் பொருள் விளங்காமல் இடர்ப்படுவர் என்பது உறுதி. ராபர்ட் பர்ன்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞர் ஸ்காட்லாந்தியப் பேச்சு வழக்கை அப்படியே பயன்படுத்திச் சிறந்த கவிதை எழுதியுள்ளார். ஆனால், ஆங்கிலம் நன்கு அறிந்தவர்களும் இன்று அக்கவிதையைப் படித்து இன்புறல் இயலாது. . மாறுபாட்டின் காரணம்

கூறவேண்டிய இடம், கூறவேண்டிய பொருள். கூறுவோரின் உணர்ச்சி வேகம் ஆகியவற்றைப் பொறுத்து ஓர் எழுத்தாளரின் நடையில் ஓரளவு மாறுபாடு ஏற்படலாம். ஆனால், இம் மாறுபாடு ஆழமானதன்று. இதையும் மீறி ஒருவருடைய நடையில் மாறுபாடு காணப்பெற்றால் அஃது அவரிலேயே ஏற்பட்டுள்ள மாறுபாடு என்பதை அறி, ல் வேண்டும். கீழேயுள்ள பகுதிகளைச் சிறிது காண்போம்:

“இந்தியா தேசம் தெய்வபக்தியில் தலைசிறந்து விளங்குவதுபோல இராஜபக்தியிலுந் தலைசிறந்து விளங்குவது. அரசனைக் கானுந் தெய்வமாகக் கருதுவது இந்தியர் வழக்கம். மன்னன் ரீமந் நாராயண மூர்த்தியின் அம்சம் என்று இந் நாட்டு நூல்கள் கூறா நிற்கின்றன. - . .

திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும் என வைணவ வேதமும், வாழ்க அந்தணர் வானவர் ஆணினம் வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக’ எனச் சைவ வேதமும் முழங்கு வதைக் காண்க

பண்டைக் காலத்தில் ஒரு கூட்டத்தார் அரசன் நீண்ட காலம் உலகத்தில் வாழும்பொருட்டு தங்கள் தலைகளைத் தாங்களே வெட்டிக் கொள்ளும் வழக்கத்தையுடையவராயிருந்தனர். அவர்கள் ஆண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/188&oldid=695481" இலிருந்து மீள்விக்கப்பட்டது