பக்கம்:திரு. வி. க.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 181

இவ்வாறு ஒரு கருத்தை இத்தகைய ஒரு நடையில் எழுதிய அதே திரு.வி.கதான் பின்னர் சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகர் பெருமானின் மந்திரத்தால் கட்டுண்டு அதனைத் தமிழகமெங்கும் பரப்பி வந்தார். 1917-18ஆம் ஆண்டுகளில் திரு.வி.க.வின் நடை இன்று நம்மில் பலருங் கைக்கொள்ளும் நடையாகவே இருந்து வந்தது.

மோட்சானந்தத்தைக் குறித்து ஞானராய்ச்சி செய்யும் வேதாந்திகளும் சுய ஆட்சி முறையில் தலைப்பட்டு உரைத்தல் வேண்டும் 7-3-1918)

ஒவ்வொரு சமயத்தவரும் அவதாரமூர்த்தி தோன்றுவதில் நம்பிக்கை உடையவராய் இருக்கின்றனர் (16–8–1918).

‘நமது பாரதத்தில் பயங்கரமான சண்டைகள் பல நடந்திருக்கின்றன.’

‘பிரஸிடென்ட் வில்சனுக்கு உயர்ந்த வேதாந்த ஞானம் பிறந்திருக்கிறது (13-12-1918).

அவர்கள் ஜபதபங்களைச் செய்து கொண்டிருப் பார்கள்.’

மேல்நாட்டு நாகரிகம் பரவாத - இங்கிலீஷ் பாஷை மணம் வீசாத-கிராமங்கள் இன்னுஞ் சில இருக்கின்றன (6-11-1918).

ஒரு சிற்ப சாஸ்திரி ஹிந்து தேவாலயத்துள்ளே நுழைந்து பிராகாரத்தைச் சுற்றிவருவானாயின் அவன் உள்ளமும் சிற்பத்தின் இயல்பும் ஒன்றுபட்டுவிடும்:

‘ஹிந்து தேவாலயங்களிலுள்ள அபிஷேகத் திரவியங்கள் முக்கிற்கு இன்பமூட்டும்: - ‘அடியார்களை ஆலிங்கனம் செய்வதனாலும் கைத் தொண்டு செய்வதனாலும், மணி ஒலியும் தீபாராதனை ஒளியும் முறையே செவிப்புலனிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/191&oldid=695485" இலிருந்து மீள்விக்கப்பட்டது