பக்கம்:திரு. வி. க.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 183

கட்சியினரும் ஒரு முகமாக மசோதாவை மறுத்தும், அம் மறுப்புரைகளை ஒரு பொருட்படுத்தாது, அதிகார வர்க்கத்தவர் தங் கருத்துவழி நின்று காரியத்தை முடித்துக்கொண்டனர். ரெளலட் சட்டம் இந்தியா வின் சுதந்திரத்தை வேரோடு களைவது என்பதை யாவரும் அறிந்திருக்கின்றனர். அறிந்தும் அதைக் களைய முந்துகின்றாரில்லை. காரணம் அச்சமும் பிறவுமேயாம்.

அச்சம் பிறவும் அறிஞர்க்கு உண்டாதல் அருமை. ஈண்டு அறிஞர் எனப்படுவோர் மேல்நாட்டுக் கல்வி பயின்று மனித தருமத்தை மறந்திருப்பவரல்லர்; தேகம் பொருள் அன்று என்ற உறுதிநிலை கைவரப் பெற்றவரேயாவர். அறிஞரை வேதாந்தி என்றுங் கூறலாம். வேதாந்தியாவார் அறிவின் முடிவு நிலை கண்டவர். .

வேதாந்தம் பிறந்த இடம் இந்தியா என்பதை உலகம் அறியும். வேதாந்தம் என்பது எல்லாச் சமய முடிபாக இருப்பது. அது, சைவர், வைணவர், புத்தர், மகமதியர், கிறிஸ்தவர் முதலியோருக்கும் உரியது. இச் சமயத் தலைவர்கள் யாவரும் வேதாந்த நிலையைக் கண்டவரேயாவர். அவ் வேதாந்த நிலையக் கண்டவருள் பெரும்பாலோர் இந்தியர் என்பது கவனிக்கற்பாலது. பண்டைக் காலத்தில் அறச்சாலை களிலும், தவச்சாலைகளிலும், மடங்களிலும், வனங் களிலும் முனிவர்களும், ரிஷிகளும், குருமார்களும், சந்நியாசிகளும் வேதாந்தங் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடியிருப்பார்கள். அவர்களைப் புலியும், பாம்பும் ஒன்றுஞ் செய்யா. அவர்கள் ஆத்ம சக்தி, நாட்டில் வாழும் அரசர்களையும், குடிமக்களையுங் காத்து வந்தது. பழைய காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/193&oldid=695487" இலிருந்து மீள்விக்கப்பட்டது