பக்கம்:திரு. வி. க.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 & அ.ச. ஞானசம்பந்தன்

இந்தியாவை ஆண்டது, ஆத்ம சக்தி என்று கூறுவது மிகையாகாது. நம் பெரியோர்கள் ஆத்ம சக்தி கைவரப் பெற்ற வேதாந்திகளாக இருந்தபடியால், அரசர் களுக்கும், அரக்கர்களுக்கும், அமரர்களுக்கும் அஞ்சாது, உலகத்தில் தருமத்தை வளர்த்து வந்தார்கள்.”

“வேதாந்த சித்தாந்த சந்நியாசிகளே ! உங்கள் முன்னோர்கள் வழியை நாடுங்கள். அவர்கள் அரசாட்சி முறையில் கவலை செலுத்தி உலகத்தைக் காத்து வந்ததைச் சிந்தியுங்கள். உங்கள் நிலை இடைக்காலத்தில் குறைந்து விட்டது. நீங்கள் எழுச்சி கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. உங்கள் ஆத்ம சக்தியைக் காட்டவேண்டிய காலம் நெருங்கி விட்டது. நீங்கள் செல்லுமிடங்கள்தோறும், பேசும் சபைகள் தோறும் சத்தியாக்கிரகத்தைப் பற்றிப் பேசுங்கள். வேதாந்த நூல் ஆராய்ச்சியுடை யோரன்றோ விரைவில் சத்தியாக்கிரக உண்மையை உணர்ந்து காந்தியடிகளுக்குத் துணை செய்ய முந்துதல் வேண்டும்? வாய் வேதாந்தம் வேண்டா; ‘அகம் பிரம்மாஸ்மி என்னும் மகாவாக்கியத்தின் பொரு ளுணர்ந்த நீங்கள் யாருக்கு அஞ்சவேண்டும்? எதற்குப் பயப்பட வேண்டும்? உங்களைக் கட்டுப்படுத்துஞ் சட்டம் உலகத்தில் இல்லை என்பதை நீங்கள் உணருங்கள். வேதாந்த சித்தாந்த சபைகள் எல்லா வற்றையும். இனிச் சத்தியாக்கிரக ஆசிரமமாக மாற்றுங்கள். இந்தியாவின் பொறுப்பு உங்களிடத்தி லிருக்கிறது. முப்பத்து முக்கோடி ஜனங்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப் பயிர்கள் வாடுகின்றன. அவற்றை ஆத்ம சக்தி என்னும் மழை பொழிந்து வளருங்கள். .

தேசபக்தாமிர்தம’ பக்கம் 76, 77 (20-3-1919).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/194&oldid=695488" இலிருந்து மீள்விக்கப்பட்டது