பக்கம்:திரு. வி. க.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அச. ஞானசம்பந்தன்

“தமிழ் தனிமொழி என்பதை முற்கால ஆசிரியன் மார்களும், பிற்கால ஆசிரியன்மார்களும், நன்கு விளக்கிக் காட்டியுள்ளார்கள். தமிழ்ப் புலமை நிரம்பப் பெற்று நூல் பல எழுதிவரும் மகாமகோபாத்தியாய சாமிநாத ஐயரவர்களும், இராகவ ஐயங்கார் முதலியோரும் தமிழ் தனிமொழி யென்னுங் கூற்றை மறப்பரோ ஒரு நாளும் மறுக்கத் துணியார். தமிழின் மூலை கண்டறியா ஒரு சிலரே அதைக் குறை கூறத் துணிவர். காலஞ் சென்ற சூரிய நாராயண சாஸ்திரி யார் எழுதிய தமிழ் மொழி வரலாறு’ என்னுஞ் சீரிய நூலைத் தமிழின் எழுத்திலக்கணமுந் தெரியாது தமிழ் தனிமொழியன்று என்று கூறும் அறிஞர்கள் வாசித்து உண்மை உணர்வார்களாக.

தனித்தியங்கும் ஆற்றலுடைய தமிழ் மொழியை தமது சென்னைச் சர்வகலாசாலையார் எங்ஙனம் வளர்த்துவருகின்றனர் என்பதைச் சிறிது ஆராய்ச்சி செய்வோம். சுமார் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர்த் தமிழ் பி.ஏ. வகுப்புவரை கட்டாய பாடமாக இருந்தது. தமிழொன்றே யெடுத்து எம்.ஏ. பரீட்சையில் தேறினவரும் பலர் இருக்கின்றனர். அங்ஙனம் தமிழை வளர்த்து வந்த சர்வகலாசாலையார் சில போலிக் காரணங்களை முன்னிட்டுத் தமிழ்ை இஷ்ட பாடமாக மாற்றிவிட்டனர். சர்வகலாசாலை அங்கத்தவர்களிற் பலர் தமிழ் இன்னதென்றே தெரியாதவர். ஒரு சிலரே தமிழாராய்ச்சி யுடையவர். தமிழ் மொழியைப்பற்றி அடிக்கடி சர்வகலாசாலையில் விவாதம் நிகழ்கிறது. - அவ்வக் காலங்களில் தமிழ்ச் சொல் காதிலுங் கேட்டறியாத சிலர் தமிழைப்பற்றி அபிப்பிராயங்கூறத் தொடங்குகின்றனர். தமிழாராயாச்சி யுடையார் வாக்குச் சர்வகலாசாலை அரங்கமேறுவதில்லை. சில காலத்தில் தமிழங்கத்தினர் மெளன விரதம் பூண்கின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/196&oldid=695490" இலிருந்து மீள்விக்கப்பட்டது