பக்கம்:திரு. வி. க.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 187

றனர். சர்வகலாசாலை இன்னுந் தமிழ் மொழியைத் தனி மொழி என உணர்ந்ததோ இல்லையோ என்பது சந்தேகம்.

சென்னைச் சர்வகலாசாலையில் வித்துவான் பரீட்சை யென்று ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக் கிறது? அப் பரீட்சைக்குச் செல்வோர் வடமொழி பயிலல் வேண்டுமாம். தமிழ் மக்களுள் பலர் வடமொழிப் பயிற்சி செய்வதில்லை; சிலர் வடமொழியை யுச்சரிக்கவே வருந்துவர். எத்தனையோ தமிழ் மக்கள் வித்துவான் பரீட்சைக்குச் செல்ல விரும்புகின்றார்கள். ஆனால், அவர்கள் தமிழல்லாப் பிற மொழிகளைப் பயிலல் வேண்டும் என்னும் நியதிக்கு அஞ்சித் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யாமலிருக்கின்றார்கள். இதைக் குறித்துச் சென்ற வாரம் சர்வகலா சாலையில் பெரும் விவாதம் அது காலை நீதிபதி சேஷகிரி .... : 5L ஐயரவர்களும், ஸ்ரீமான் சி.பி. இராமசாமி ஐயரவர்களும் தமிழ் உண்மை கண்டு பேசியதற்குப் பெரிதும் நன்றியறிதலுடையோம்.

தெலுங்கு முதலிய திராவிட பாஷைகளைப் பயில்வோர்க்கு வடமொழி ஞானம் அவசியம் வேண்டுமென்பதை மறுப்பாரில்லை. தமிழ்ப் பரீட் சைக்குச் செல்வோர்க்கு வடமொழிப் பாடம் பெருந் தடையாக நிற்கிறது என்பதையே யீண்டு நாம் சர்வ கலாசாலையாருக்கு அறிவுறுத்துகிறோம்.”

நெஞ்சுரம் வேண்டும்

இற்றை நாளில் தமிழின் தனித்தியங்கும் ஆற்றல் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் சிறப்பன்று; அது நாகரிகமாகவும் கருதப்படுகிறது. ஆனால் இன்றைக்கு 50 ஆண்டுகளின்

- தேசபக்தாமிர்தம்’, ப. 114 - 116.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/197&oldid=695491" இலிருந்து மீள்விக்கப்பட்டது