பக்கம்:திரு. வி. க.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இ. அ.ச. ஞானசம்பந்தன்

இத்துணைச் சிறப்புகளும் வாய்ந்த அப் பெரியார் புகாத் துறை இல்லை. புகுந்தவிடத்தைப் பொன்னாக்காமல் விடவுமில்லை. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் தோன்றிய பெரியோர்கள் பலர். அவர்கள் அனைவரும் ஒவ்வொரு துறையை மேற்கொண்டு அத்துறையில் மிகச் சிறந்த பணியாற்றினர். ஆனால், எல்லாத் துறைகளிலும் புகுந்து ஒப்பற்ற முறையில் தனி வழி வகுத்துக் கொண்டு அருந் தொண்டாற்றிய பெரியார் ஒருவர் உண்டு என்றால், அவர்தாம் திரு. வி.க.

தொண்டர் இருவகை

தொண்டாற்றிய பெரியோர்களையும்கூட அவர்கள் செய்த தொண்டின் அடிப்படையில் இருவகையாகப் பிரிக்கலாம். முதல் வகையார் தாம் மேற்கொண்ட தொண்டில் முற்றிலும் தம்மை அமிழ்த்துக் கொண்டவர். இரண்டாம் வகையார் தாம் என்ற நிலை மாறாமலேயே தொண்டைச் செய்பவர்கள். இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள் உலகியல் முறையில் தம் வளர்ச்சியை விட்டுக் கொடாமலே தொண்டாற்றினர். இவ்வாறு கூறுவதால் அவர்கள் செய்த தொண்டைக் குறைத்து மதிப்பிடுவதாக எண்ணுவது தவறு. வகைப்படுத்திப் பேசுவதே என்னுடைய நோக்கமாகும். மகா மகோபாத்யாய டாக்டர் உ.வே. சுவாமி நாதையர், மறைமலையடிகள், கா. நமச்சிவாய முதலியார் போன்றவர் இந்த இரண்டாம் இனத்தைச் சேர்ந்தவர்கள். திரு. விக, கவியரசர் பாரதியார் போன்றவர்கள் முதலினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மேற்கொண்ட தொண்டில் தம்மையே அமிழ்த்துக் கொண்டமையின் உலகியல் முறையில், பொருளாதார முறையில் முன்னேற்றம் பெறாமற் போய்விட்டனர். இவர்களுடைய தொண்டு எஞ்சிற்றே தவிர இவர்கள் எஞ்சவில்லை. இவர்களைச் சேர்ந்தவர்கள், இவர்கள் குடும்பத்தார் என்பவர்கட்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/20&oldid=695494" இலிருந்து மீள்விக்கப்பட்டது