பக்கம்:திரு. வி. க.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 ஆ அச. ஞானசம்பந்தன்

நல்லதை எண்ணுகிறது; ஆனால், அதுவாகவில்லை. இவ்விருவித எண்ணங்களில் எது ஆற்றல் வாய்ந்தது? தீய எண்ணமே ஆற்றல் வாய்ந்ததாகும். வேறொருவன் உள்ளம் நல்லதிலேயே ஒன்றி ஒன்றி அதுவாகிறது. மற்றொருவன் உள்ளம் தீயதில் ஒவ்வொருபோது படிகிறது. ஆனால், அதுவாகவில்லை. இவ்விரு வகை எண்ணங்களில் வல்லமையுடையது எது? நல்லெண் ணமே வல்லமையுடையதாகும். தீமையையே எண்ணி எண்ணி அதுவாகிய நெஞ்சம் ஒன்று; நல்லதையே எண்ணி எண்ணி அதுவாகிய நெஞ்சம் ஒன்று. இரண்டும் அவ்வத்தன்மையில் பூரண சக்தி பெற்றிருக் கின்றன. இவற்றில் எதைப் பெரிதென்று சொல்வது? இதற்கு, அனுபவம் தேவை. நல்லதே பெரிது என்று அனுபவம் உணர்த்தும். முழு நல்லது முழுத் தீமையை வெல்லும். அரைகுறையிலேயே (நல்லதிலேயே) தீமை மேம்படுவதாகும். ஆகவே, நல்லெண்ணங்கள் பெருகப் பெருக உலகம் நலம் பெறுவதாகுமென்க.”

1949இல் அதே நடை விறுவிறுப்பைக் கைவிட்டு மென்மை அடைகிறது. அதே சின்னஞ் சிறிய வாக்கியங்கள் தாம். என்றாலும் ஒவ்வொரு சொல்லிலும் ஆழம் அதிகமா கிறது.

“வாழ்க்கை எத்தகையதாயினும் ஆக அதன் குறிக்கோள் நிறைவேறுதல் வேண்டும். குறிக்கோள் நிறைவேற வாழ்க்கையை அநுபவிக்கக் கடமைப்படல் வேண்டும். அநுபவத்திற்கென்று வாழ்க்கை ஏற்பட்டது. அநுபவிக்கும் முறைமை நேரியதாயிருந்தால் நலன் விளையும்; வேறு வழியினதாயிருந்தால் தீமை விளையும்.

உள்ளொளி, பக்கம் 50, 51.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/206&oldid=695501" இலிருந்து மீள்விக்கப்பட்டது