பக்கம்:திரு. வி. க.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இச் 197

நேரிய வழி எது? வேறு வழி எது? வாழ்க்கையை நடத்துவது பரம்பொருள் என்னும் உணர்வுடன் நடப்பது நேரிய வழி. ‘வாழ்க்கை வழி பரம்பொருள் என்பது நல்லுணர்வு அல்லது மெய்யுணர்வு என்றும், வாழ்க்கை வழி என்னுடையது’ என்று நினைப்பது தீய உணர்வு அல்லது பொய்யுணர்வு என்றும் குறிக்கும் அளவில் இங்கே நின்றுவிடுகிறேன். விளக்கம் பின்னை.

நன்மையும் தீமையும் கலந்து கலந்து போராடிப் போராடி வாழ்க்கையைத் தூய்மை செய்யும். இத் தூய்மை வாழ்க்கை வழி பரம்பொருள் என்பதை உணர்த்தும். இதை அநுபவத்தால் பெறலாம். இவ்வதுப வத்தைப் பெறுதற்கென்று வாழ்க்கையில் நன்மை தீமை முதலிய வேற்றுமைகளும் போராட்டங்களும் நிகழ் கின்றன என்று கொள்க't

காயும் பழமும்

பத்திரிகையில் உணர்ச்சி தோன்ற எழுதுவதற்காகத் தோற்றுவிக்கப்பெற்ற நடை நாளாவட்டத்தில் பளபளப் புடன் இருந்த மாங்கனி மெல்லத் தோல் சுருங்குவது போலச் சுருங்கிக் கவிதை வடிவம் கொள்ளலாயிற்று. காய்ப் பருவத்தில் அதே மாங்காயின் சுவை வேறு. அதனை நினைப் பவர் நாவில் நீர் ஊறச்செய்யும் இயல்பு உண்டு. ஆனால், பல்லையும் கூசவைக்கும். பல் கூசுவது பற்றிக் கவலைப் படாமல் அதனைத் தின்னும் பருவத்தில் உள்ளவர்கட்கு மாங்காய் கிடைத்தற்கரிய பொருளே! அதே மாங்காய் பழுத்து, நன்கு கனிந்து, தோல் சுருங்கி, முற்றிலும் கொழுஞ்சாறாக ஆயின நிலையில் சுவையும் மிகுதி: அனைவரும் அதனை உண்ணலாம் உண்ண விரும்புபவர்க்கு

t பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி, ப. 102-103.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/207&oldid=695502" இலிருந்து மீள்விக்கப்பட்டது