பக்கம்:திரு. வி. க.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 201

தேவைக்கு மேலுன்னாச் செம்மை ஒழுக்கத்தின் ஆவி அருளாட்சி ஆம்.” (4)

1953ஆம் ஆண்டில் திரு.வி.க. அவர்கள் உலக வாழ்வை நீப்பதன் முன்னர் எழுதிய வளர்ச்சியும் வாழ்வும் என்ற நூலில் ஒரு பகுதியை இங்கே காணலாம். மனிதனுடைய வீழ்ச்சியை மனம் நொந்து எடுத்துக் கூறியுள்ளார். இங்கு:

“பகுத்தறி வற்ற வகுப்புயி ரெல்லாம் தளர்ச்சி யின்றி வளர்ச்சி யடைதலென்? இயற்கை வாழ்வின் பயிற்சி போலும், மக்கள் வளர்ச்சியில் சிக்கல் உறுதலென்? பகுத்தறி வுடைய வகுப்போ காரணம்? செயற்கை வாழ்க்கையில் பயிற்சி பெற்றான் வளர்ச்சி வாழ்வில் தளர்ச்சி யடைந்தது; மனித்தன் என்றோ சனித்து விட்டான்; காலங் கணித்துக் கோலல் அரிதே. - எத்தனை யுகமோ? எத்தனை ஊழியோ? இன்னும் அவன்வாழ் தொன்மை உலகம் தெய்வ மயமாய் உய்ய வில்லை. சாந்தம் முற்றும் ஏந்த வில்லை. என்ன காரணம்? உன்னிப் பார்க்க மனிதன் முதல்முதல் இனிது வாழ்ந்தான் உழைக்கும் உழுதும் பிழைத்து வந்தான்ற ஒருவன் பொருளை ஒருவன் கவரும் கல்வி பயிலாச் செல்வம் பெற்றான். கொலையுங் களவுங் கள்ளுங் காமமும் பொய்யும் அற்ற மெய்யில் நின்றான் சுரண்டல் வாழ்வில் புரண்டா னில்லை

இருளில் ஒளி, பக்கம் 32; 33; குறள் 27, 28, 29, 30

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/211&oldid=695507" இலிருந்து மீள்விக்கப்பட்டது