பக்கம்:திரு. வி. க.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இச் 203

மனிதனுடைய வரலாற்றையும், அவனுடைய சிறுமையையும், அவன் இருக்கவேண்டிய பெருமையையும், அவன் வீழ்ச்சியின் காரணத்தையும் நன்கு ஆய்ந்துள்ளார். இயற்கை வழிபாட்டையும் சமரச மனப்பண்பையும் கொண்டு அறவழி நின்றால்ஒழிய, தன் பிழையை நினைந்து கதறி அழுதா லொழிய மனிதனுக்கு உய்கதி இல்லை எனப் பெரியார் கண்டு பாடுகிறார். பல பாடல்களில் ஒசை நயம் இயல்பாக அமைந்துகிடக்கக் காண்கிறோம். கவிஞனுக்குரிய அனைத் துலக நோக்கமும் பெரியாரிடம் இருக்கின்றது. என்றாலும், திரு.வி.க.வை ஒரு மாபெரும் கவிஞர் என்று கூறமுடியாது. தமிழ்நாட்டிலும் ஏன் இந்தியாவிலேயே தோன்றிய தீர்க்க சிந்தனையாளர்களுள் ஒருவர் என்றும், ஒப்புயர்வற்ற எழுத்தாளர் என்றும், இக் காலத்துக்கேற்ற முறையில் சமரச சன்மார்க்கங் கண்ட சீலர் என்றும் கூறினால் அது மிகையாகாது. என்றாலும், சாதாரணக் கவிஞர் என்றுதான் அவரைக் கூறல் வேண்டுமே தவிரச் சிறந்த கவிஞர் என்று கூறவியலாது. * ,

உரையாசிரியர்

முன்னர்க் கூறிய அந்தணைத் துறைகளிலும் புகுந்து புறப்பட்ட பெரியார் உரையாசிரியப் பணியையும் மேற் கொண்டுள்ளார். இவற்றுள் பெரிய புராணத்துக்குக் குறிப்புரை எழுதியதும் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியும் அவருடைய நுண்மாண் நுழைபுலத்தை அறிவுறுத்தி நிற்கின்றன. 1907 முதலே பெரிய புராணத்துக்குக் குறிப்புரை எழுதி வந்தார். .

‘உலகெலாம் என்று தொடங்கும் முதற் பாட்டிற்கு முப்பத்து நான்கு பக்கங்களில் விரிவுரையும் ஏனைய பாடல்கட்குக் குறிப்புரையும் எழுதியுள்ளார். பாயிரத்தின் தொடக்கத்தில் அவர் எழுதும் சில தொடர்கள் நெஞ்சை உருக்கும் நீர்மையன: 2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/213&oldid=695509" இலிருந்து மீள்விக்கப்பட்டது