பக்கம்:திரு. வி. க.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 அச. ஞானசம்பந்தன்

கண்ணிருத்தலால், அது விழுப்பமுடையதாகிறது. அவ்விழுப்பத்தைத் திருமூலர், “அகார முதலாக ஐம்பத் தொன்றாகி-உகார முதலாக ஓங்கி உதித்து’ என்றும், ‘அகார முதலா அனைத்துமாய் நிற்கும்-உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும் என்றும், அகாரம் உயிரே உகாரம் பரமே என்றும் அருளியிருத்தல் காண்க. உலகெலாம் உய்தல் வேண்டும் என்னும் மங்கல ஒலியாக உகரம் முதற்கண் பொலிகிறது.” . அடுத்து ஒதற்கு அரியவன்’ என்ற பகுதிக்குப் பொருள் விரிக்கின்றார்:

“மெய்யுணர்வு பெறாத உயிர்கள், ஆண்டவனை யுணர்ந்து ஒதல் அரிது. கரணங் கடந்த மெய்யுணர்வு பெற்றோர் ஆண்டவனுண்மையை உணர்தல் இயலும்; ஆனால், அவர்களாலும் அதனை ஒதல் இயலாது. ஒதலில் அடங்குவது எல்லையுடையது. ஆண்டவனோ எல்லையில்லாதவன். அவன் இன்பமும் எல்லை யில்லாதது. எல்லையிலா ஒன்றை எங்ஙனம் எல்லைப் படுத்தி ஒதுவது? அதனால் அவ்வொன்று ஒதற்கரிய தாகிறது. இதனை அநுபூதிமான்களின் மெய்ம் மொழி களால் உணரலாம். ஓத உலவா ஒரு தோழன், ‘ஏதவனைப் பாடும் பரிசு’, ‘ஆழ்ந்து அகன்ற நுண்ணி யனே, மாற்ற மனங் கழிய நின்ற மறையோனே, நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே, ‘சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க, சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க’, ‘அரியதில் அரிய அரியோன் காண்க, போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே’, ‘சொல்லற் கரியானை’, ‘சொற்கழிவு பாதமலர்’, ‘ஒன்றுநீ யல்லை அன்றி யொன்றில்லை யாருன்னை அறிய கிற்பாரே, உணர்ந்தாற் குணர்

  • திருத்தொண்டர் புராணம், பக்கம் 15.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/216&oldid=695512" இலிருந்து மீள்விக்கப்பட்டது