பக்கம்:திரு. வி. க.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 இ. அ.ச. ஞானசம்பந்தன்

மனிதன் செய்த பணி

உலகம் தோன்றிய நாளிலிருந்து அதன் வளர்ச்சிக்கு மனித சமுதாயம் இயன்றவரை உதவி புரிந்தும், கேடு சூழ்ந்து வந்துள்ளது. மனிதன் உணர்வின் துணைகொண்டு உதவி செய்தும் உள்ளான்; அறிவின் துணைகொண்டு உதவியும் கேடும் சூழ்ந்துமுள்ளான். அறிவின் துணைகொண்டு மானிட சாதிக்குப் பயன் தரும் என்ற கருத்தில் காணப்பெற்ற விஞ்ஞானப் புதுமைகள் அம் மனிதன் வளர்ச்சிக்கு உதவி செய்யாமல் அவன் அழிவுக்குக் காரணமானதும் உண்டு. அறிவினால் காணப்பெற்ற விஞ்ஞானப் புதுமைகள் தேன் தடவிய வாள் முனைபோல இரண்டுக்கும் பயன்பட்டன. நன்கு பயன்படுத்தப்பெற்றால் அவை சமுதாயத்திற்கு நற்பயன் விளைத்தன; தவறாகப் பயன்படுத்தினால் அதே புதுமைகள் மனித சமுதாயத்திற்குத் தீமையும் புரிந்தன.

உணர்வுப் பணி

இதன் எதிராக உணர்வின் துணையுடன் செய்யப் பெற்ற பணியில் தீமையின் கலப்பே இல்லை. இத்தொண்டு சிறிதாகவோ, பெரிதாகவோ இருக்கலாம். அதன் பயன் உடனேயும் கிட்டலாம்; இன்றேல் பன்னெடுங்காலம் கழித்தும் கிட்டலாம்; என்றாலும் இத்தொண்டால் விளை யும் பயன் மட்டும் நல்லதாகவே இருக்கும். புத்தர், இயேசு, ரிஷப தேவர், ஞானசம்பந்தர், நம்மாழ்வார், இராமகிருஷ்ண பரமஹம்சர், மகாத்மா காந்தி போன்றவர்கள் செய்த பணி அல்லது தொண்டு இவ்வகையைச் சேர்ந்தது. விஞ்ஞானப் புதுமைகள் போல் இவர்கள் தொண்டின் பயன் நேரிடையாகச் சமுதாயத்திற்குக் கிட்டியதில்லை. அது உடனடியாகக் கிடைப்பதுமில்லை. என்றாலும் இப் பெரியார்கள் செய்யும் தொண்டை உலகம் மறப்பதில்லை; நன்றிக்கடன் செலுத்தாமல் இருப்பதுமில்லை. உண்மையைக் கூறவேண்டுமானால் இவர்களைத்தான் தொண்டர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/22&oldid=695516" இலிருந்து மீள்விக்கப்பட்டது